தேவையான பொருட்கள்
பேப்பர் பிளேட்ஸ்தேவை இல்லாத பிளாஸ்டிக் டப்பா
கார்ட்போர்ட் அட்டை (உருண்டை வடிவில் வெட்டியது)
பெயிண்ட்ஸ்
பசை துப்பாக்கி
கத்தரிக்கோல்
செய்முறை
முதலில் பேப்பர் ப்ளேட்டின் நடுவில் டம்பளர் வைத்து வட்டம் போடவும். பிறகு பேப்பர் பிளேட்டை பூ வடிவில் சின்னச்சின்ன மெல்லிய கூர்-முனை இதழ்களாக கத்தரிக்கவும். நடு வட்டத்தின் உள்ளே வெட்டிவிடக் கூடாது. மூன்று ப்ளேட்டையும் இதே போல வெட்டிக்கொள்ள வேண்டும்.பிளாட்டின் இதழ்களை பிரித்தால், இரண்டு இதழ்களாக பிரிந்து வரும். எல்லாவற்றையும், பிரித்த பிறகு பார்த்தால், மேலாக இருப்பது பேப்பராதளால் சுருண்டு பூ மொட்டு போல வந்திருக்கும்.
மூன்று ப்ளேட்களையும் ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டி, பிடித்த வண்ணம் தீட்டவும்.
கார்ட்போர்ட் அட்டைக்கு வெள்ளை வண்ணம் தீட்டி காய விடவும். அதற்குள் பிளாஸ்டிக் டப்பாவில் சின்னச்சின்ன இலைகள் வரைந்து அவற்றை வெட்டி வைக்கவும்.
பிறகு, அட்டையின் ஓரங்களை சுற்றி பிளாஸ்டிக் இலைகளை ஒட்டி, பச்சை அல்லது மயிலிறகு போல வண்ணம் தீட்டவும்.
பெயிண்ட் காய்ந்ததும் பேப்பர் பூவினை நடுவில் ஒட்டவும். பிறகு சுவற்றில் உங்கள் வசதிக்கேற்ப மாட்டிவிடுங்கள்.
இந்த சுவர் அலங்காரம் பார்க்க மிக அழகாக இருக்கும். நீங்களும் இதை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
இந்த craft-ன் செய்முறை video பார்க்க இந்த URL https://www.youtube.com/user/saranyascrafts -லை அழுத்துங்கள்.
நன்றி...!!!
No comments:
Post a Comment