தேவையான பொருட்கள்
தேவையில்லாத பிளாஸ்டிக் டப்பா
கத்தரிக்கோல்
பெயிண்ட்
சர்க்கரை
க்ளிட்டேர்
மெல்லிய கம்பி அல்லது பைப் க்ளினர்
செய்முறை
பிளாஸ்டிக் டப்பாவில் சின்னச்சின்ன பூக்கள் வரைந்து, அவற்றை வெட்டிக்கொள்ளவும்.
பூக்களின் நடுவில் சிறு துளை போட்டு அதில் கம்பி அல்லது பைப் க்ளினரை (நான் பைப் க்ளினரை உபயோகப்படுத்தியுள்ளேன், இது கிராப்ட் கடைகளில் கிடைக்கும்) செருகி, மேலே நீட்டிக்கொண்டிருக்கும் கம்பியை வளைத்து பூவுக்குள்ளேயே செருகவும், வேண்டுமானால் அதில் ஒரு மணியை கோர்த்து பிறகு வளைத்து விடலாம்.
பூக்களுக்கு பெயிண்ட் செய்து காய விடவும். சர்க்கரையுடன் க்ளிட்டேர் (glitter - இது பவுடர் போல இருக்கும் மினுமினுப்பான பொடி, கடைகளில் கிடைக்கும்) சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். பூக்களின் மேல் பசை தடவி இந்த சர்க்கரை கலவையை நன்றாக தூவி காய விடவும்.
இதுதான் இந்த craft -ன் ஸ்பெஷல்.
பிறகு ஒரு கிளாஸ் பாட்டில் அல்லது உங்களுக்கு பிடித்தமான முறையில் "vase" செய்து அதில் கொஞ்சம் clay (அல்லது மண்) நிரப்பி அதில் பூக்களை செருகவும்.
இப்பொழுது மிக அழகான பூகுவளை தயார். இது பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். நீங்களும் இந்த பூக்குவலையை செய்து உங்கள் வீட்டினை மேலும் அழகாகுங்கள்.
இதன் செய்முறையை வீடியோ வாக பார்க்க வேண்டுமெனில் இந்த URL http://youtu.be/YGFOsk_0mpA -லைக் கிளிக் செய்யுங்கள்.
நன்றி...!!!
No comments:
Post a Comment