தேவையில்லாத தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு செய்த அழகிய பூஜாடி (Waste bottle flower vase - model 2)
தேவையான பொருட்கள்
தேவையில்லாத பாட்டில்கள் (waste bottles)பெயிண்ட் (paints)
சிறு குச்சிகள் (dry sticks)
பசை துப்பாக்கி (glue gun)
கத்தரிக்கோல் (scissor)
செய்முறை
ஒரு பூ செய்வதற்கு இரண்டு பாட்டில்கள் தேவைப்படும். முதலில் பாட்டிலை இரண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும். இங்கே மூடியோடு கூடிய பகுதி பூ செய்வதற்கும், கீழ்பகுதி இலைகள் செய்வதற்கும் பயன்படுத்த போகின்றோம். பூபகுதியை சின்னச்சின்ன இதழ்களாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
வெட்டிய இதழ்களை நன்றாக கீழாக அழுத்தி விரித்து விட வேண்டும். பிறகு இரண்டாவது பாட்டிலின் மூடிபகுதியை மூடியோடு கூடிய கழுத்து பகுதியை வெட்டி எடுத்துவிட்டு, முன்னது போலவே சின்னச்சின்ன இதழ்களாக வெட்டி, அதனை உருட்டி பிரியாமல் ஒட்டிவிடவும். இப்பொழுது பார்க்க மொட்டு போல இருக்கும்.
பூ மற்றும் மொட்டின் நுனிபகுதியை லேசான விளக்கு ஒளியில் காட்டவும், அது மடங்கி விரிந்து, பார்க்க நிஜப்பூவின் இதழ்கள் போல அழகாக இருக்கும். இப்பொழுது மொட்டை, பூவின் மூடிக் கழுத்து பகுதியில் செருகி பசை துப்பாக்கி கொண்டு நன்றாக ஒட்டிவிடவும்
பூவிற்கு வண்ணம் தீட்டி நன்றாக காயவிடவும். பின்பு, மூடியில் துளை போட்டு, குச்சியை செருகவும், குச்சி ஆடாமல் நிற்க, பசை கொண்டு ஒட்டிவிடவும்.
மீதீருக்கும் பாட்டிலின் இன்னொரு பகுதியை சின்னச்சின்ன இலைகள் போல் வெட்டி, குச்சியின் மேல் இடைவெளி விட்டு ஒட்டவும். குச்சிக்கும் இலைகளுக்கும் பச்சை வண்ணம் தீட்டவும்.
இது போல இன்னும் சில பூக்கள் செய்து, ஒரு அடர்ந்த நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட பாட்டிலில் (நான் என் பாட்டிலின் கீழ் பகுதியையே "vase" ஆக பயன்படுத்தி இருக்கிறேன்) கொஞ்சம் மண் அல்லது பிசைந்த மாவு நிரப்பி, அதில் பூக்களை செருகவும்.
இப்பொழுது அழகான பூகுவளை தயார். இந்த கையால் செய்யப்பட்ட பூகுவலையை பார்பவர்கள் நிச்சயம் எங்கே வாங்கினீர்கள் என்றுதான் கேட்பார்கள். அவ்வளவு அழகாக இருக்கும் இது.
நீங்களும் இதை செய்து பாருங்கள்! உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதுங்கள்!!
இதன் செய்முறையை video வாக பார்க்க வேண்டுமென்றால் இந்த URL https://www.youtube.com/user/saranyascrafts -லைக் கிளிக் செய்யுங்கள்.
நன்றி...!!!
No comments:
Post a Comment