கார்ட்போர்ட் அட்டையில் மிக எளிமயான முறையில் செய்த அழகிய பூஜாடி
தேவையான பொருட்கள்
பொம்மைகள் அல்லது வேறு பேக்கிங் அட்டை (packing cardboard cover)
பெயிண்ட்
கத்தரிக்கோல்
காய்ந்த குச்சிகள்
தேவையில்லாத பிளாஸ்டிக் டப்பா (இலைகள் செய்வதற்கு)
செய்முறை
முதலில் அட்டையில் பூக்கள் வரைந்து அவற்றை வெட்டி வைக்கவும்.
பூவின் நடுவில் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்திவிடவும். பிறகு ஒவ்வொரு இதழையும் சாப் ஸ்டிக்கை (chop stick) அதன் கீழ் பகுதியில் வைத்து இதழ்களை மடக்கி உருட்டவும். இப்படி செய்வதால் விறைப்பாக இருக்கும் அட்டை மடங்கி கொடுத்து அழகாக பூ வடிவில் வந்திருக்கும்.
பூவிற்கு நடுவில் துளை போட்டு குச்சியை செருகவும். குச்சியில் நிறைய சிறுசிறு கிளைகள் இருந்தால் பார்க்க அழகாக இருக்கும். ஒவ்வொரு கிளையிலும் பூக்கள் செருகி வண்ணம் தீட்டவும்.
பூக்களினுள் குச்சிகள் நீட்டிக்கொண்டிருக்காமல் பார்த்துக்கொள்ளவும். அதை மறைப்பதற்கு அதன் மேல் கற்கள் அல்லது மணிகள் அல்லது பட்ஸ் (earwax buds) கூட ஒட்டலாம்.
பிளாஸ்டிக் கேனில் இலைகள் வரைந்து, வெட்டி, பச்சை வண்ணம் கொடுத்து, காய்ந்ததும் குச்சிகளின் மேல் இடைவெளி விட்டு ஒட்டவும்.
பெயிண்ட் நன்றாக காய்ந்ததும், ஒரு கண்ணாடி பாட்டிலில் கொஞ்சம் கிளே (clay) அல்லது மண் நிரப்பி, அதில் குசிகளை செருகவும்.
இப்பொழுது அழகான அட்டை பூக்கள் கொண்டு செய்த பூகுவளை தயார். இதை நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள "COMMENT" box-ல் பகிர்ந்திடுங்கள்.
நன்றி...!!!

No comments:
Post a Comment