இது ஒரு கண் கவர் அலங்காரம், வீட்டை அலங்கரிக்க ஒரு எளிய கைவினை ஆகும்.
இதன் செய்முறையை வீடியோவாகப் பார்க்க இங்கே சொடுக்கவும்.
பிளாஸ்டிக் கப் அல்லது பேப்பர் கப் (பேப்பர் கப் என்றால் கட் பண்ண எளிதாக இருக்கும்.)
இன்ஸ்டன்ட் பசை அல்லது பசைத் துப்பாக்கி
பாலித்தேன் பைகள்
க்ளிட்டேர்ஸ்
பெயிண்ட்ஸ்
கத்தரிக்கோல்/மார்கர் பேனா
இது கொஞ்சம் அதிக வேலை என்று நினைப்பவர்கள், கோவில் மணி விடிவில் பிளாஸ்டிக்கில் சின்னச்சின்ன தொங்கிகள் கடைகளில் கிடைக்கும், அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
முக்கால் அடி நீளத்தில் மணிகளைக் கத்தரித்துக் கொள்ளவும். ஒரு முனையில் செய்து வைத்த பூக்களை ஒட்டவும். வேண்டுமானால் தனித்தனி மணிகளாக வாங்கி, பூவோடு கோர்த்துக்கொள்ளலாம்.
இரண்டு பேப்பர் கப்புகளை ஒன்றுக்குள் ஒன்றாக ஒட்டவும் (தடிமனான கப்பாக இருந்தால் ஒன்றே போதும்.).
நான் வரைந்தது போல வரைந்து வெட்டிக் கொள்ளுங்கள், அல்லது உங்களுக்கு பிடித்த மாதிரி இதழ்கள் வரைந்து, அழகாக வெட்டவும்.
கப்பிற்கு உள்ளும் வெளியேயும் உங்களுக்கு பிடித்த டிசைனில் பெயிண்ட் தீட்டவும்.
இப்போது, ஒவ்வொரு இதழின் நுனியிலும் ஒவ்வொரு தொங்கியாக இன்ஸ்டன்ட் glue கொண்டு ஒட்டவும். இல்லையானால் பஞ்ச் மெசின் கொண்டு ஓட்டை போட்டு, ஒவ்வொரு தொங்கியாக ஓட்டைக்குள் விட்டு முடிச்சு போடவும். தொங்கிகள் சமமான நீளத்தில் இருக்க வேண்டும்.
நடுவிற்கு நீளமாக இருந்தால் நன்றாக இருக்கும்.
கப்பிற்கு மேற்புறம் சமமான இடைவெளியில் மூன்று தொங்கிகள் கோர்த்து, 15 cm நீளம் விட்டு இணைக்கவும்.
நுனியில் நூல் கட்டி ஆணியில் தொங்க விடவும். மணிகளின் நிறத்தில், மிக அழகாக இருக்கும் இந்த தொங்கி.
உங்கள் வீட்டில் எதாவது விசேஷத்திற்கு என்றால், இது போல இரண்டு மூன்று நிறத்தில் ஆங்காங்கே தொங்க விட்டால் சூப்பராக இருக்கும்.
இதன் செய்முறையை வீடியோவாகப் பார்க்க இங்கே சொடுக்கவும்.
தேவையான பொருட்கள்:
பிளாஸ்டிக் பீட் செயின் (கோல்டன் கலர் என்றால் எடுப்பாக இருக்கும், கம்மியான விலையில் தான் நான் வாங்கியிருந்தேன்.)பிளாஸ்டிக் கப் அல்லது பேப்பர் கப் (பேப்பர் கப் என்றால் கட் பண்ண எளிதாக இருக்கும்.)
இன்ஸ்டன்ட் பசை அல்லது பசைத் துப்பாக்கி
பாலித்தேன் பைகள்
க்ளிட்டேர்ஸ்
பெயிண்ட்ஸ்
கத்தரிக்கோல்/மார்கர் பேனா
செய்முறை :
முதலில், மணிகளின் கீழ் தொங்க, காகிதப் பைக் கொண்டு பூக்கள் செய்துக் கொள்ளலாம், அதன் செய்முறை சொல்வதற்கு சற்றுக் கடினம், வீடியோவில் நன்றாகப் புரியும். (பார்க்க இங்கே சொடுக்கவும்.)இது கொஞ்சம் அதிக வேலை என்று நினைப்பவர்கள், கோவில் மணி விடிவில் பிளாஸ்டிக்கில் சின்னச்சின்ன தொங்கிகள் கடைகளில் கிடைக்கும், அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
முக்கால் அடி நீளத்தில் மணிகளைக் கத்தரித்துக் கொள்ளவும். ஒரு முனையில் செய்து வைத்த பூக்களை ஒட்டவும். வேண்டுமானால் தனித்தனி மணிகளாக வாங்கி, பூவோடு கோர்த்துக்கொள்ளலாம்.
இரண்டு பேப்பர் கப்புகளை ஒன்றுக்குள் ஒன்றாக ஒட்டவும் (தடிமனான கப்பாக இருந்தால் ஒன்றே போதும்.).
நான் வரைந்தது போல வரைந்து வெட்டிக் கொள்ளுங்கள், அல்லது உங்களுக்கு பிடித்த மாதிரி இதழ்கள் வரைந்து, அழகாக வெட்டவும்.
கப்பிற்கு உள்ளும் வெளியேயும் உங்களுக்கு பிடித்த டிசைனில் பெயிண்ட் தீட்டவும்.
இப்போது, ஒவ்வொரு இதழின் நுனியிலும் ஒவ்வொரு தொங்கியாக இன்ஸ்டன்ட் glue கொண்டு ஒட்டவும். இல்லையானால் பஞ்ச் மெசின் கொண்டு ஓட்டை போட்டு, ஒவ்வொரு தொங்கியாக ஓட்டைக்குள் விட்டு முடிச்சு போடவும். தொங்கிகள் சமமான நீளத்தில் இருக்க வேண்டும்.
நடுவிற்கு நீளமாக இருந்தால் நன்றாக இருக்கும்.
கப்பிற்கு மேற்புறம் சமமான இடைவெளியில் மூன்று தொங்கிகள் கோர்த்து, 15 cm நீளம் விட்டு இணைக்கவும்.
நுனியில் நூல் கட்டி ஆணியில் தொங்க விடவும். மணிகளின் நிறத்தில், மிக அழகாக இருக்கும் இந்த தொங்கி.
உங்கள் வீட்டில் எதாவது விசேஷத்திற்கு என்றால், இது போல இரண்டு மூன்று நிறத்தில் ஆங்காங்கே தொங்க விட்டால் சூப்பராக இருக்கும்.
No comments:
Post a Comment