கேக் ட்ரேவில் செய்த எளிதான பூ அலங்காரம் (cake tray flower wall hanging)
தேவையான பொருட்கள்
பிறந்தநாள் கேக்கின் அடியில் உபயோகபடுத்தும் அட்டை
போம் சீட் (foam sheet)
கத்தரிக்கோல் (scissor)
க்ளிட்டேர் (glitter)
பசை (glue)
ஜம்கி (confetti)
செய்முறை
முதலில் போம் சீட்டில் நமக்கு பிடித்தமான பூ டிசைன் வரைந்து, அதனை வெட்டிக்கொள்ள வேண்டும். அது போல இலை தண்டு என எல்லாவற்றையும் வெட்டிக்கொள்ள வேண்டும்.
வெட்டிய பகுதிகளை ட்ரேவில் அழகாக ஒட்டி அதில் க்ளிட்டேரை தூவிக்கொள்ள வேண்டும். ட்ரேவின் மீதும் கொஞ்சமாக லேசாக துவவும்.
ட்ரேவின் ஓரம் முழுவதும் பார்டர் போல் ஜம்கிகளை ஒட்டவும்.
அவ்வளவுதான்... இப்பொழுது பசை நன்றாக காய்ந்ததும் சுவற்றில் புஷ் பின் அல்லது டபுள் டேப் (push pin or double tape) கொண்டு ஒட்டி விடவும். மிக எளிதாக செய்யக்கூடிய அழகான சுவர் அலங்காரம் தயார்.
நீங்களும் இதை செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள "comment" பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.
நன்றி...!!!
No comments:
Post a Comment