தேவையான பொருட்கள்
பிளாஸ்டிக் கேன்பெயிண்ட்
பசை துப்பாக்கி (glue gun)
கத்தரிக்கோல்
க்ளிட்டேர்
கார்ட்போர்ட் அட்டை
செய்முறை
முதலில் பிளாஸ்டிக் கேனில் இரட்டை மயிலின் உடம்புப் பகுதியை மட்டும் (படத்தில் உள்ளது போல) வரைந்து, வெட்டி வைக்கவும்.பிறகு, ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு, நீர்த்துளி வடிவத்தில், நிறைய மயில் தோகை வரைந்து அவற்றையும் வெட்டி வைக்கவும்.
தோகை மற்றும் உடம்புப் பகுதிகளை இணைத்து
பசை துப்பாக்கி (glue gun) கொண்டு ஒட்டவும். அப்பொழுதுதான் பிளாஸ்டிக் நன்றாக ஒட்டும்.
படத்தில் உள்ளது போல தொகை வந்தவுடன், உங்களுக்கு பிடித்தமாதிரி பெயிண்ட் செய்யுங்கள் .
பெயிண்ட் நன்றாக காய்ந்தவுடன், ஒவ்வொரு மயில்கண் மேலேயும் பசை தடவி க்ளிட்டேர் தூவவும்.
அட்டையை "heart" வடிவத்தில் வெட்டி, கலர் செய்யவும். பிளாஸ்டிக் கேனில் பூ அல்லது இலை போல வரைந்து, வெட்டி, பெயிண்ட் செய்து, அட்டையின் ஓரத்தை அலங்கரிக்கவும்.
மயிலை அட்டையின் நடுபகுதியில் ஒட்டவும். இப்பொழுது ஒரு அழகான இரட்டை மயில் அலங்காரம் தயார்.
இதன் செய்முறையை "video" வாக பார்க்க வேண்டுமானால் இந்த URL http://youtu.be/x0Pml9-y2UY -லைக் கிளிக் செய்யுங்கள்.
நன்றி...!!!
No comments:
Post a Comment