பபுள் கவர் மற்றும் பிளாஸ்டிக் டப்பாவைக் கொண்டு செய்த பேனா ஸ்டாண்ட் (Easy pen (spoon or brush) holder with salt tin and bubble cover!)
தேவையான பொருட்கள்
எதாவது ஒரு கொஞ்சம் நீளமான டப்பாபபுள் கவர்
பெயிண்ட்
பசை துப்பாக்கி
அலங்காரம் செய்வதற்கு ஜம்கி, க்ளிட்டேர், etc (வேண்டுமானால்)
செய்முறை
முதலில் டப்பாவின் மேல் ஒட்டியிருக்கும் பேப்பரை எடுத்துவிட்டு, அதனைச் சுற்றி பபுள் பேப்பரினை பசை துப்பாக்கி (அல்லது உடனே ஒட்டிக்கொள்ளும் பசை) கொண்டு ஒட்டவும்.பபுள் பேப்பரின் மேல் உங்களுக்கு பிடித்தமான டிசைனில் பெயிண்ட் செய்யவும்.
பெயிண்ட் காய்ந்த பிறகு ஜம்கி, க்ளிட்டேர் அல்லது உங்களிடம் இருக்கும் அலங்காரப் பொருட்கள் கொண்டு அலங்கரிக்கவும். உங்களிடம் ரிப்பன் துணி இருந்தால், மேல் விளிம்பிலும், கீழ் விளிம்பிலும் சுற்றி ஓட்டலாம், பார்க்க அழகாக இருக்கும்.
அவ்வளவுதான், ஒரு நல்ல உபயோகமான கைவினைப் பொருள் நம் கைகளில்...! இதன் செய்முறையை வீடியோவாக பார்க்க, இந்த URL http://youtu.be/Qf_mpXV12fI -லைக் கிளிக் செய்யுங்கள்.
இந்த சுலபமான பேனா அல்லது ஸ்பூன் ஸ்டான்டினை நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள "கமெண்ட்"-ல் குறிப்பிடுங்கள்.
நன்றி...!!!
No comments:
Post a Comment