பருப்பு மற்றும் விதைகளைக்கொண்டு செய்த ரங்கோலி சுவர் அலங்காரம்
தேவையான பொருட்கள்
வீட்டில் இருக்கும் பருப்புகள் மற்றும் விதைகள்
கார்ட்போர்ட் அட்டை
பெயிண்ட்
பசை
செய்முறை
கார்ட்போர்ட் அட்டையை சதுரமாக அல்லது உங்கள் விருப்பம் போல் வெட்டி அதற்கு பெயிண்ட் செய்துக்கொள்ள வேண்டும்.
பெயிண்ட் நன்றாக காய்ந்ததும் (இல்லையென்றால் பசை நன்றாக ஒட்டாது) உங்களுக்கு பிடித்த ரங்கோலி டிசைன் வரைந்து, அதன் மேலும் உள்ளும் விதைகள் கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும்.
இங்கே காட்டப்பட்டுள்ள படம் ஒரு எடுத்துக்காட்டு தான், உங்கள் விருப்பம் போல உங்களுக்குப் பிடித்த ரங்கோலி வரைந்து அசத்துங்கள்.
இது மிக எளிதான ஒரு அழகான சுவர் அலங்காரம் ஆகும். நீங்களும் இதை செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதுங்கள்.
நன்றி...!!!
No comments:
Post a Comment