டிஷ்யு பேப்பர் ஹோல்டர் கொண்டு செய்த அழகிய பூகுவளை
தேவையான பொருட்கள்:
டிஷ்யு பேப்பர் ஹோல்டர் (tissue paper holder)
கத்தரிகோல் (scissor)
பெயிண்ட் (paint)
பசை (glue)
காய்ந்த குச்சிகள் (dry sticks)
செய்முறை
1) டிஷ்யு பேப்பர் ஹோல்டரை (இல்லையென்றால் வேறு எதாவது ஒரு மெல்லிய அட்டை) முழு நீளமாக வெட்டி, அதில் சின்னச்சின்ன பூ இதழ்கள் வரைந்து அவற்றை கத்தரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
2) ஒரு குச்சியினை எடுத்து அதன் சிறு முனையில் வெட்டி வைத்துள்ள இதழ்களை பூ வடிவில் ஒவ்வொன்றாக ஒட்டிக்கொள்ள வேண்டும்.
3) பூவின் நடுவில் ஒரு பட்டின் (earwax bud) பாதி பகுதியை ஒட்டவும். பூவிற்கு பிடித்த நிறத்தில் வண்ணம் தீட்டவும். பூந்தண்டிற்கும் பச்சை நிறம் கொடுக்கவும்.
4) இது போல வேண்டிய பூக்களை செய்து, ஒரு சிறிய பிளாஸ்டிக் பாட்டிலின் நுனியை வெட்டிவிட்டு அதில் கொஞ்சம் மண் மற்றும் கலர் கற்கள் நிரப்பி, அதில் டிச்சு பூக்களை நட்டு வைக்கவும்.
இப்பொழுது ஒரு அழகான பூகுவளை தயார். இந்த டிஷ்யு பேப்பர் ஹோல்டர் பூக்களுக்கு சரியாக பெயிண்ட் கொடுத்தால் பார்க்க நிஜப்பூக்கள் போலவே தோன்றும்.
இந்தப்பூகுவலையை நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை எங்கலுக்கு எழுதுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment