தேவையான பொருட்கள்:
பால் கேன் (milk jug) (or ஆயில் கேன்)
கத்தரிக்கோல் (scissor)
வண்ணம் (paint)
காய்ந்த குச்சிகள் (dry sticks)
பசை துப்பாக்கி (glue gun )
செய்முறை:
1) முதலில் பால் கேனின் மேல் பூ டிசைன் வரைந்து கொள்ளவும். பிறகு வரைந்த பகுதியை கத்தரித்து கொள்ளவும்.
2) பிறகு அந்தப் பூ டிசைனில் பிடித்த வண்ணம் தீட்டிக்கொள்ளவும். நடுவில் சிறு துளை இட்டு, ஒரு குச்சியை செருகிக்கொள்ளவும்.
3) இது போல இன்னும் நெறைய செய்து கொள்ளவும். பிறகு அதே பால் கேனில் சின்னச்சின்ன இலைகள் வரைந்து, அவற்றை கத்தரித்து வண்ணம் தீட்டிக்கொள்ளவும்.
4) பிறகு ஒரு பூ ஜாடியில் கொஞ்சம் மணல் அல்லது களிமண் அல்லது பிசைந்த மாவு நிரப்பி அதில் குச்சிகளை செருகவும். அப்பொழுதுதான் குச்சிகள் நேராக நிற்கும்.
5) இப்பொழுது மிக எளிதான ஒரு அழகான பூ ஜாடி தயார்.
இதை உங்கள் வீட்டில் செய்து வீட்டை அழகாக்குங்கள். வீட்டினரை அசத்துங்கள். மீண்டும் அடுத்த ப்ளாகில் சந்திப்போம்.
நன்றி!
No comments:
Post a Comment