தேவையான பொருட்கள்:
பிளாஸ்டிக் கேன் (plastic can like milk jug, oil can, etc)
பெயிண்ட் (paint)
சிசர் (scissor)
பசை துப்பாக்கி (glue gun)
செய்முறை:
1) முதலில் பால் கேனில் பூ இதழ்கள் வரைந்து அதை கத்தரித்து வைத்துக்கொள்ளவும்.
2) பிறகு ஒரு கார்ட்போர்டை (cardboard) சதுரமாக வெட்டி அதில் பேக்கிரௌண்ட் கலர் கொடுக்கவும். பெயிண்ட் காய்ந்ததும் வெட்டி வைத்த இதழ்களை பூப் போல ஒட்டவும்.
3) பூக்கள் நிறைய ஒட்டி அதற்குத் தகுந்தார் போல தண்டு, இலைகள் வரைந்துக்கொள்ளவும்.
4) பெயிண்ட் நன்றாக காய்ந்ததும், டபுள் டேப் கொண்டு சுவற்றில் அழகாக ஒட்டிவிடவும்.
இது செய்வதற்கு மிக எளிமையான, பார்க்க அழகான சுவர் அலங்காரம்.
பூக்களை பிளாஸ்டிக் கானில் இருந்து செய்வதால், தேவையில்லாத பொருளை அழகாக உபயோகப் படுத்தியதாகவும் இருக்கும், அதே சமயம், பூக்களும் பார்பதற்கு கொஞ்சம் மினுமினுப்பாக அழகாக இருக்கும்.
இதை உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள், உங்கள் கருத்துகளை எனக்கு எழுதுங்கள்!
நன்றி!!!
No comments:
Post a Comment