பிளாஸ்டிக் கேன் மயில் சுவர் அலங்காரம் (Plastic can Peacock wall craft!)!
பிளாஸ்டிக் கேன் (plastic can)
கத்தரிக்கோல் (scissor)
பெயிண்ட் (paint)
அலங்காரக் கற்கள் (color stones)
க்ளிட்டேர் (glitter)
பசை துப்பாக்கி (glue gun)
தேவையான பொருட்கள்
பிளாஸ்டிக் கேன் (plastic can)
கத்தரிக்கோல் (scissor)
பெயிண்ட் (paint)
அலங்காரக் கற்கள் (color stones)
க்ளிட்டேர் (glitter)
பசை துப்பாக்கி (glue gun)
செய்முறை
1) முதலில் பிளாஸ்டிக் கேனின் மேல் படத்தில் காட்டியுள்ளதைப் போல மயில் வரைந்து (தொகையைத் தவிர) அதனைத் தனியாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் படத்தில் காட்டியுள்ளது போல நீதுளிகள் போல வரைந்து அவற்றியும் வெட்டி தனியாக வைத்துக்கொள்ளவும்.
2) வெட்டிய தொகைப் பகுதிகளை ஒவ்வொன்றாக சேர்த்து மயில் தொகை போல ஒட்டிக்கொள்ள வேண்டும்.
3) பின்னர் மயில் நிறத்துக்கு ஏற்றார் போல் பெயிண்ட் செய்து, அதன் மீது க்ளிட்டேர் தூவிக்கொள்ள வேண்டும்.
4) வேண்டுமானால் ஒவ்வொரு மயில்கண் மீதும் ஒரு கலர் ஸ்டோன் ஒட்டிகொல்ள்ளலாம். பார்க்க மிக அழகாக இருக்கும்.
5) கடைசியாக நம் விருப்பம் போல ஒன்று, மயிலின் பின்பகுதியில் டபுள் டேப் ஒட்டி சுவற்றில் (மரசுவர் or மரக்கதவு) அப்படியே ஓட்டிவிடலாம், இல்லையென்றால் ஒரு கார்டோர்ட் அட்டையில் பெயிண்ட் அடித்து அதில் மயிலை ஒட்டி சுவற்றில் மாட்டி விடலாம். இரண்டுமே பார்பதற்கு அழகாக இருக்கும்.
இது மிகவும் அழகான ஒரு கரப்ட் ஆகும். இதை பூஜை அறைக்கதவு, வீட்டின் முன் கதவு, அல்லது ஒரு பெயரின் இரண்டு பக்கத்திலும் இரண்டு மயில் செய்து ஓட்டலாம்.
என்னுடைய குழந்தையின் பிறந்தநாளுக்கு இப்படித்தான் செய்தேன். எல்லோரும் பாரட்டினார்கள்.
இதை நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment