தேவையான பொருட்கள்
மண் விளக்கு (pot candle)
நெயில் பாலிஷ் nail polish)
பிளாஸ்டிக் கேன் (like milk jug, oil can, etc)
சின்ன உருண்டை மெழுகுவர்த்தி (small round candle)
பசை துப்பாக்கி (hot glue gun)
பைப் கிளீனர் (pipe cleaner or cure pipes, we can get this in craft shop)
க்ளிட்டேர் (glitter)
ஜம்கி
செய்முறை
1) முதலில் மண் விளக்கினை நெயில் பாலிஷ் கொண்டு வண்ணம் தீட்டவும், இந்த கோட்டிங் எண்ணெய் உறிஞ்சுவதை தடுக்கும்.
2) பால் கேனில் பூ இதழ்கள் போல வரைந்து அதை தனிதனியாக கத்தரித்துக் கொள்ளவும்.
3) ஒரு சின்ன அட்டை எடுத்து அதை உருண்டையாக கத்தரித்து, நடுவில் விளக்கினை வைக்கும் அளவு ஒரு வட்டம் போட வேண்டும். பிறகு கத்தரித்து வைத்தவற்றை ஒவ்வொன்றாக அந்த வட்டத்தின் மேல் ஓட்ட வேண்டும்.
4) இப்பொழுது ஒரு அழகான பூ வடிவம் கிடைக்கும். பைப் கிளீனர் ஒன்று எடுத்து அதை வட்டத்தின் மேல் வட்டமாக ஓட்ட வேண்டும் (பைப் கிளீனரை எப்படி வேண்டுமானாலும் மடக்கலாம், இது இல்லாதவர்கள் வேறு அலங்கார பொருள் கொண்டு அலங்கரிக்கலாம்). பிறகு கோல்டன் கலர் பைப் கிளீனரை பூ இதழ்களின் ஓரம் சுற்றி ஒட்டவும்.
5) பிறகு ஒரு நெயில் பாலிஷ் கொண்டு பூவிற்கு வண்ணம் தீட்டவும்.
6) நெயில் பாலிஷ் காய்ந்த பிறகு ஜம்கி மற்றும் க்ளிட்டேர் கொண்டு படத்தில் காட்டுவது போல் (அல்லது உங்கள் விருப்பம் போல்) அலங்கரிக்கவும்.
7) இப்பொழுது விளக்கினை பூவின் நடுவில் அட்டையின் மேல் ஒட்டவும். வேண்டுமானால் விளக்கின் நடுவில் எண்ணைக்கு பதிலாக சின்ன மெழுகுவர்த்தி வைத்துக்கொள்ளலாம்.
இப்பொழுது அழகான சுலபமான வேட்டிலேயே செய்யக்கூடிய விளக்கு அலங்காரம் தயார்.
இதை நம்முடைய பூஜை ரூமில் வைக்கலாம். பார்க்க மிகவும் அழகாக இருக்கும் . நீங்களும் இதை செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment