தேவையான பொருட்கள்:
முட்டை அட்டை (egg carton)
கத்தரிகோல் (scissor)
பெயிண்ட் (paint)
மெல்லிய கம்பி (wire)
நீளமான பாட்டில் or திசு ஹோல்டர் (plastic bottle or tissue tube holder)
ரெசின் கற்கள் (resin color stones)
செய்முறை:
1) முட்டை அட்டைக் குழிகளை தனித்தனியாக கத்தரிக்கவும்.
2) ஒவ்வொன்றையும் பூ போல வெட்டிக்கொள்ள வேண்டும்.
3) பூக்களின் நடுவில் சிறு துளையிட்டு கம்பியினை செருகி, நுனியினை மடக்கி விட வேண்டும்.
4) பூக்களுக்கு தகுந்த நிறத்தில் வண்ணம் தீட்டிக்கொள்ள வேண்டும்.
பூக்களின் நடுப்பகுதியில் ரெசின் கற்களை ஒட்டவும் (இதற்கு பதிலாக மணிகள் கூட ஓட்டலாம்).
5) பிறகு ஒரு நீளமான பாட்டில் அல்லது திசு ஹோல்டரை எடுத்து, எடுப்பான வண்ணத்தில் பெயிண்ட் செய்து அதில் கொஞ்சம் மண் நிரப்பி, அதில் கம்பிகளை அழுந்த செருக வேண்டும் (அப்போதுதான் பூக்கள் சாயாமல் இருக்கும்).
இப்பொழுது ஒரு அழகான முட்டை அட்டை பூகுவளை தயார்.
இதனை நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment