போம் ஷீட், திசு பேப்பர் ஹோல்டர் மற்றும் பிளாஸ்டிக் கேன் கொண்டு செய்த டோர் ஹாங்கிங் (Door hangings with foam sheet, tissue paper holder and plastic can - a different idea)
தேவையான பொருட்கள்
போம் ஷீட் (foam sheet)
திசு பேப்பர் ஹோல்டர் (tissue paper holder)
பிளாஸ்டிக் கேன் (plastic can)
பெயிண்ட் (paint)
கத்தரிக்கோல் (scissor)
உல்லன் நூல் (woollen thread)
செய்முறை
நான் மூன்று பொருட்கள் பொருட்கள் இந்த க்ராப்டிற்கு பயன்படுத்தி இருக்கிறேன் - போம் ஷீட்டில் செய்த மணிகள், திசு ஹோல்டரில் செய்த பூக்கள் மற்றும் பிளாஸ்டிக் கேனில் செய்த பூக்கள்.
போம் மணிகள்:
(பார்க்க பெரிய பாரா போல தெரிந்தாலும் இதை செய்வது சுலபந்தான்)போம் ஷீட்டில் 20 cm இடைவெளியில் இரு கோடுகள் இழுங்கள்.
பிறகு ஒரு கோட்டின் மேல் ஸ்கேல் வைத்து ஒவ்வொரு 1 inch-க்கும் புள்ளி வையுங்கள்.
அதே போல் இன்னொரு கோட்டின் மேல் 1 inch இடைவெளியில், அனால் முதல் கோட்டின் புள்ளிகளுக்கு நேராக இருக்காமல் நடுநடுவில் வர வேண்டும் (அதாவது நாம் சந்துப்புள்ளி வைத்து கோலம் போடுவோமில்லையா, அது போல).
இப்பொழுது இரு கோட்டின் புள்ளிகளையும் ஜிக் ஜாக்காக இணையுங்கள். ஒவ்வொன்றும் நீளமான முக்கோணம் போல இருக்கும்.
அந்த ஒவ்வொரு கோடையும் கத்தரியுங்கள்.
இப்பொழுது உங்கள் கையில் நீளமான முக்கோண வடிவில் வெட்டப்பட்ட போம் சீட் இருக்கும். ஒரு நேரான குச்சியை (chop stick) எடுத்து முக்கோணத்தின் அகலமான முனையின் மேல் வைத்து பிடித்து, மறு கையால் ஷீட்டினை உருட்டி சுற்றுங்கள். கூர் முனை வந்ததும் கொஞ்சம் பசை தடவி ஒட்டிவிடுங்கள்.
இப்பொழுது அழகான மணி வந்திருக்கும்.
வீடியோவாக பார்க்க இந்த URL http://youtu.be/PaORNZ9J3IM -லைக் கிளிக் செய்யுங்கள்.
திசு பூக்கள்:
திசு ஹோல்டர் என்பது திசு பேப்பர் பண்டல் (bundle) நடுவில் இருக்கும் tube அட்டை. இந்த ட்யூபை முழு நீளத்திற்கு கத்தரிக்கவும்.இப்பொழுது நீல பேப்பர் போல இருக்கும். அதை ஒரே அளவில் மூன்றாக கட் செய்யவும். பின்பு இரண்டு இரண்டு இன்ச்சாக கட் செய்யவும்.
படத்தில் இருப்பது போல சின்னச்சின்னதாக கட் செய்து உருட்டி வெளிபகுதியில் பசை தடவி ஒட்டிவிடவும். பூவிற்கு வண்ண தீட்டி காயவிடவும்.
பிளாஸ்டிக் பூக்கள்:
பிளாஸ்டிக் கேனில் பூ வரைந்து கட் செய்து பெயிண்ட் அடித்து காய விட்டு பூவின் நடுவில் punching machine கொண்டு ஓட்டை போடுங்கள்.டோர் ஹாங்கிங்:
மேலே குறிப்பிட்டுள்ள மூன்றையும் உங்கள் விருப்பம் போல மொத்தமான நூலில் கோர்த்து கதவில் அழகாக தொங்க விடுங்கள்.சூப்பரான ஒரு டோர் ஹாங்கிங்கை நீங்களே செய்து தொங்க விடுங்கள். உங்கள் வீட்டினரை அசத்துங்கள்.
உங்கள் கருத்துகளையும் சந்தேங்களையும் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள "COMMENT"-ல் குறிப்பிடுங்கள்.
நன்றி...!!!
No comments:
Post a Comment