தேங்காய் மூடி மற்றும் முட்டை அட்டையைக் கொண்டு செய்யப்பட்ட அழகிய பூ கோபுரம் செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள்
தேங்காய் மூடி (coconut shell)
முட்டை அட்டை (egg carton)
திசு பேப்பர் ஹோல்டர் (tissue paper holder) அல்லது ஏதாவது ஒரு பைப்
சிறிய பேப்பர் ப்ளேட் (small paper plate)
பெயிண்ட் (paint)
கத்தரிக்கோல் (scissor)
மணிகள் & க்ளிட்டேர் (தேவையெனில்)
செய்முறை
முதலில் முட்டை அட்டையை பகுதி பகுதியாக வெட்டி ஒவ்வொரு முட்டைக் குழியையும் தனியே வெட்டி எடுத்து அதை பூ வடிவில் வெட்டி வைக்கவும்.
பின்னர், தேங்காய் மூடியின் நார்களை சுத்தமாக நீக்கிவிட்டு முட்டை பூக்களை கீழிருந்து ஒவ்வொன்றாக இடைவெளி இல்லாமல் ஒட்டவும்.
மூடியின் உச்சியில் கோபுரம் போல் அலங்கரிக்க மெல்லிதாக இருக்கும் பிளாஸ்டிக் கேன் ஒன்றில் கொஞ்சம் பெரிய சைஸ் பூ வரைந்து, வெட்டி எடுத்து, அந்தப் பூவின் நுனிகளை நடுவிற்கு கொண்டு வந்து (மடக்கி) ஒட்ட வேண்டும். அதன் மேல் ஒரு பாதி விரிந்தது போல் வெட்டிய முட்டை பூவை வைத்து ஒட்டினால் பார்க்க பூ கோபுரக்கவசம் போல அழகாக இருக்கும்.
பூக்களுக்கு வண்ணம் தீட்டி காய விடவும். தேங்காய் மூடியின் உள் பகுதியில், திசு பேப்பர் ஹோல்டர் அல்லது ஒரு 1/2 முலம் நீளமான பிளாஸ்டிக் பைப்பினை ஒட்டிக்கொள்ள வேண்டும். பைப்பின் இன்னொரு நுனியை ஒரு பேப்பர் பிளேடின் நடுவில் ஒட்டவும்.
இப்பொழுது குடை போன்ற வடிவில் பூ கோபுரம் பார்க்க அழகாக இருக்கும். பைப் மற்றும் ப்ளேட்க்கு பெயிண்ட் செய்யவும். வேண்டுமானால் ஒவ்வொரு பூவின் நடுவிலும் கற்கள் அல்லது மணிகள் பதிக்கலாம். கோபுரம் முழுவதும் லேசாக பெயிண்ட் காய்வதற்கு முன் க்ளிட்டேர் தூவலாம்.
இப்பொழுது மிக அழகான பூ கோபுரம் தயார். இதன் செய்முறையை வீடியோவாக பார்க்க விரும்பினால் http://youtu.be/bvQhcJgigRw -லைக் கிளிக் செய்யுங்கள்.
நீங்களும் இந்த அழகான கிராப்டினை செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
நன்றி...!!!
No comments:
Post a Comment