சால்ட் டின் மற்றும் வுல்லன் நூல் கொண்டு செய்த அழகிய பேனா ஸ்டான்ட் (Beautiful pen (spoon or brush) holder with salt tin and woollen thread)
தேவையான பொருட்கள்
சால்ட் டின் அல்லது நீளமாக இருக்கும் எதாவது ஒரு காலி டப்பா (salt tin)
கொஞ்சம் தடிமனாக இருக்கும் வுல்லன் நூல் கண்டு (thick woollen bundle)
பார்சல் கவர் (உள்பக்கம் பபுள் பேப்பர் ஓட்டபட்டிருக்கும்) (parcel bubble cover)
பெயிண்ட் (paint )
பசை அல்லது பசை துப்பாக்கி (glue or glue gun )
செய்முறை
முதலில் சால்ட் டின்னின் மேல் ஒட்டியிருக்கும் பேப்பரையும் மூடிபகுதியையும் நீக்கிவிட்டு , எவ்வவளவு நீளம் வேண்டுமோ அதை மார்க் செய்து அதிகமான பகுதியை வெட்டி எடுத்துவிடவும்.
பிறகு வுல்லனின் முனைப்பகுதியை டின்னோடு ஒட்டி, கீழிருந்து மேலாக நெருக்கமாக சுற்றவும். டின் முழுவதும் சுற்றிய பிறகு, நுனியை டின்னோடு பிரியாது ஒட்டிவிடவும்.
பபுள் கவரை பூ, சதுரம், போல சின்னச்சின்னதாக வெட்டி, டின்னின் மேல் ஒட்டி (எடுத்துகாட்டுக்கு படத்தில் இருப்பது போல), பிடித்தமான வண்ணம் தீட்டவும்.
வேண்டுமானால் அலங்காரத்திற்கு க்ளிட்டேர் தூவலாம் அல்லது மணிகள் ஒட்டலாம்.
அவ்வளவுதான் வேலை... பத்தே நிமிடங்களில் செய்யக்கூடிய உபயோகமான இந்த பேனா ஸ்டான்டினை நீங்களும் உங்கள் கற்பனை போல செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் பகுதியில் குறிப்பிடுங்கள்.
இந்த craft-ன் செய்முறையை video -வாக பார்க்க, இந்த URL https://www.youtube.com/user/saranyascrafts -லை அழுத்துங்கள். ஆங்கிலத்தில் படிக்க http://saranyajo.blogspot.com/ -லை அழுத்துங்கள்.
நன்றி...!!!
No comments:
Post a Comment