பேப்பர் ப்ளேட்டை கொண்டு செய்த பேப்பர் ட்ரீ (Tree craft made with paper plates and tissue holder)!
எதையாவது கொஞ்சம் வித்யாசமாக முயற்சிக்கலாமே என்று யோசித்தபோது இந்த "paper tree craft" செய்து பார்க்கலாமே என்று தோன்றியது. எனக்குத் தோன்றியதை இங்கே முயற்சித்திருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.தேவையான பொருட்கள்
பேப்பர் பிளேட்ஸ் - 5 (paper plates - reused)சின்ன ஐஸ் கிரீம் ப்ளேட் - 1 (one ice cream plate)
திசு ஹோல்டர் (tissue paper holder)
பெயிண்ட்ஸ் (paints)
க்ளிட்டேர் (optional)
பசை, பசை துப்பாக்கி (glue, glue gun)
செய்முறை
இந்து பேப்பர் ப்ளேட்களையும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவுகளில் (பெரியது முதல் சிறியது வரை) படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல வெட்டிக்கொள்ளுங்கள். வெட்டிய மீதித் தேவையில்லாத காகித துண்டுகளை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.பிளேட்டின் வெட்டிய ஓரங்களை உள்பக்கமாக மடக்கி விடுங்கள். பின்பு திசு ஹோல்டரை வேண்டிய நீளத்திற்கு வெட்டி, ப்ளேட்டின் நடுவே ஒட்டுங்கள் (செடி அல்லது மரத்தின் தண்டு போல). தண்டின் இன்னொரு நுனியை சின்ன ஐஸ் கிரீம் ப்ளேட்டின் நடுவில் படத்தில் உள்ளது போல ஒட்டுங்கள்.
இது போல வெட்டி வைத்துள்ள மற்ற ப்ளேட்களையும் ஒன்றன் மேல் ஒன்றாக திசு ஹோல்டரின் உதவியுடன் ஓட்டுங்கள். கீழே பெரிதாகவும் மேலே குருகியதாகவும் பார்க்க மரம் போல இருக்க வேண்டும்.
கடைசி உச்சி பகுதி செய்வதற்கு, வெட்டிவைத்துள்ள தேவையில்லாத காகித துண்டுகளை, இலை போல வெட்டி திசு ஹோல்டரைச் சுற்றி ஒட்ட வேண்டும் (படம் பார்க்க). இதை மேலே கடைசியாக உள்ள ப்ளேட்டின் நடுவே ஒட்ட வேண்டும். இப்பொழுது பார்க்க மரம் போல வந்திருக்கும்.
பிறகு உங்களுக்கு பிடித்தது போல பெயிண்ட் செய்து வேண்டுமானால் இலைகளின் மேல் பசை தடவி க்ளிட்டேர் தூவிக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான், ஒரு அழகான tree craft தயார் ஆகிவிட்டது. இதன் செய்முறையை விளக்குவதற்கு சற்று கடினமாக இருந்தாலும், செய்வதற்கு எளிதான ஒன்றுதான். நீங்களும் இந்த craft-னை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
No comments:
Post a Comment