பயன்படுத்திய பொருட்கள்:
பெரிய பேப்பர் ப்ளேட்- 1 (Large paper plate - 1)பிளாஸ்டிக் ஐஸ் கிரீம் கப் அல்லது சிறிய காகித ப்ளேட் - 1 (Plastic ice-cream cup or small paper plate)
தேவையில்லாத பிளாஸ்டிக் கேன் (Empty milk jug or any plastic can)
மணிகள் (Beads)
கம்பளி நூல் கண்டு (Woolen thread bundle)
பூசணி விதைகள் (Pumpkin seeds)
பிளாஸ்டிக் ஸ்ட்ரா (Plastic straws)
பஞ்சிங் மெசின் (Punching machine)
கத்தரிக்கோல் (Scissor)
பசை அல்லது பசை துப்பாக்கி (Glue or Glue gun)
செய்முறை விளக்கம்:
முதலில் பஞ்சிங் மெசின் கொண்டு காகித ப்ளேட் மற்றும் ஐஸ் கிரீம் கப்பின் ஓரங்களில் 1 or 2 inch இடைவேளை விட்டு துளைகள் போடவும்.பிளாஸ்டிக் கேனில் பூ இதழ்கள் வரைந்து வெட்டி கொள்ளுங்கள். இதழ்களை பிளேட்களின் ஓரங்களில் ஒட்டுங்கள்.
பசை காய்ந்ததும் காகித ப்ளேட் மற்றும் ஐஸ் கிரீம் கப் முழுவதற்கும் உங்களுக்கு பிடித்தது போல கலர் செய்து காய விடுங்கள்.
தொங்கும் பூக்கள் இரண்டு வகையில் செய்யலாம், முதலில் மணி பூக்கள் செய்வதற்கு, ஒரு பெரிய உருண்டையான மணியை எடுத்து அதன் ஓரங்களைச் சுற்றி சற்று சிறிய மணிகளை பசை துப்பாக்கி கொண்டு ஒட்டவும்.
பூசணி விதைப் பூக்கள் செய்வதற்கு, ஒரு பெரிய உருண்டையான மணியை எடுத்து அதன் ஓரங்களைச் சுற்றி பூசணி விதைகள் பூ வடிவில் ஒட்டவும்.
பூக்கள் செய்த பிறகு வுல்லன் நூல் கொண்டு பூக்கள், ஸ்ட்ராஸ், மற்றும் மணிகளை படத்தில் உள்ளது போல அல்லது உங்கள் விருப்பம் போல தனித்தனியே கோர்த்து வைக்கவும்.
பிளேட்ஸ் இரண்டையும் ஒட்டி, பெயிண்ட் நன்றாக காய்ந்த பிறகு, நூல் தொங்கிகளை ஒவ்வொரு ஓட்டைக்கும் ஒவ்வொரு தொங்கியாக நுலைத்து பக்கத்து நூலோடு முடி போட்டு விடவும்.
தொங்கிகள் பார்க்க அழகாக தெரிய, பெரிய ப்ளேட்டில் கோர்த்த தொங்கிகளின் நீளம் சிறிய ப்ளேட் தொங்கிகள் மற்றும் நடு தொங்கியின் நீளத்தை விட குறைவாக இருக்க வேண்டும். சற்று தூரத்தில் இருந்து பார்க்க, தொங்கும் பூக்கள் "V" வடிவில் இருக்க வேண்டும்.
அவ்வளவுதான்... கடைசியாக மாட்டுவதற்கு வசதியாக நடுவில் தொங்கும் நூலினை பிளேடின் மேலே கொஞ்சம் நீளமாக விட்டு முடி போடுங்கள்.
இப்பொழுது ஹாலின் நடுவே சுவற்றில் ஆணியில் மாட்டித் தொங்க விடுங்கள், பார்க்க அழகாக இருக்கும்.
எளிதாக செய்யக்கூடிய இந்த craft-னை நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
நன்றி...!!!
No comments:
Post a Comment