தேவையான பொருட்கள்
காலேண்டர் பேப்பர்கார்ட்போர்ட் அட்டை
நிலக்கடலைத் தோல்
பிஸ்தா தோல்
கருவேப்பிலைக் குச்சிகள்
பெயிண்ட்
பசை துப்பாக்கி or பசை
கத்தரிக்கோல்
செய்முறை
சென்ற ஆண்டு உபயோகித்த காலேண்டர் பேப்பர் ஒன்றை முழுதாக கிழித்துக் கொள்ள வேண்டும். பேப்பர் வெளிர் நிறமாக இருந்தால் நன்று. கார்ட்போர்ட் அட்டையை வேண்டிய வடிவத்தில் கத்தரித்து, அதன் மேல் காலேண்டர் பேப்பரை சுற்றி, அட்டையின் மறுபக்கமாக மடித்து ஒட்டிவிடவும்.பேப்பரின் மேல் கருப்பு வண்ணம் தீட்டவும். கருப்பு அல்லது வேறு அடர் நிறம் கொடுத்தால் பேப்பரில் உள்ள எழுத்துக்கள் தெரியாமல் இருக்கும்.
பெயிண்ட் காய்ந்ததும், கருவேப்பிலைக் குச்சிகலை ஒரு செடியின் தண்டு போல ஒட்டவும். அதில் பூக்கள் போல கடலைத் தோட்களையும், இலைகளுக்கு பிஸ்தா அல்லது ஒரு கொட்டை உள்ள கடலைத் தோட்களை ஒட்டவும்.
பூக்கள், இலைகள், தண்டுகளுக்கு வண்ணம் தீட்டவும்.
வேர் பகுதிக்கு கற்கள் ஒட்டவும்.
பெயிண்ட் நன்றாக காய்ந்ததும் "double tape" கொண்டு சுவற்றில் ஓட்டிவிடலாம். இது மிக மிக எளிதாக செய்யக்கூடிய ஒரு "craft" ஆகும். குழந்தைகளுக்கு ஏற்ற craft இது.
நீங்களும் இதனை செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். நன்றி.
No comments:
Post a Comment