என் கணவர் ஒரு தடவை புதிதாக வாங்கி வந்த டீத்தூள் மிகக் கசப்பாக இருந்தது. டீக்காக அதை பயன்படுத்த முடியவில்லை. அந்தத்தூளை என்ன செய்யலாம் என்று யோசிக்கையில், அதை வைத்து crafts செய்யலாம் என்று தோன்றியது. அதன் ஒரு முயற்சிதான் இந்த "welcome board craft". இதை (செய்து) பார்த்துவிட்டு, எப்படி இருக்கிறது என்று உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
பிளாஸ்டிக் கேன் (எடுத்துக்காட்டு: பால் டப்பா - empty milk jug)
டீத்தூள்
உப்புத்தூள்
கோலப் பொடி (ஏதேனும் ஒரு கலர் பொடி கலந்தது)
கத்தரிக்கோல்
பைப் க்லினெர் (pipe cleaner or cure pipes - craft கடைகளில் கிடைக்கும்)
க்ளிட்டேர் (glitter)
ஜம்கி (confetti)
பசை, பசை துப்பாக்கி
பிளாஸ்டிக் கானில் 2.5 inches மற்றும் 1.5 inches என்று இரண்டு அளவுகளில் நிறைய வட்டம் போட்டு, தனித்தனியாக வெட்டி வைக்கவும்.
வெட்டிவைத்துள்ள வட்டங்களில் பூ இதழ்கள் வரைந்து, அதற்குத் தகுந்தார் போல வெட்டிக்கொள்ளவும்.
பெரிய பூவின் நடுவில் சிறிய பூவை ஒட்டி, பூவின் நடுவில் ஒரு ஜம்கியை ஒட்டவும். இது போல நிறைய பூக்கள் செய்து வைக்கவும்.
அட்டையில் பெயிண்ட் நன்றாக காய்ந்த பிறகு, ஓரங்களையொட்டி 1 inch வித்யாசத்தில் இரண்டு செவ்வக கோடுகள் போடவும். கோடுகளின் மேல் முழு நீளத்திற்கும் கோல்டன் வயர் போல இருக்கும் பைப் க்லினெரை ஒட்டவும்.
இப்பொழுது மூன்று பகுதிகளாக இருக்கும். நடு பகுதியில் "welcome" எழுத வேண்டும். அதற்கு, நடு பகுதி முழுவதும் பசை தடவி அதன் மேல் அடர்த்தியாக டீத்தூள் தூவவும்.
பசை காயுமுன் நடுவில் விரலைக் கொண்டு "WELCOME" என்று அழுத்தி எழுதவும். இப்பொழுது அந்த எழுத்துக்களின் மேல் இருக்கும் டீத்தூள் பெயர்ந்து, எழுத்துக்கள் வெள்ளையாகத் தெரியும்.
எழுத்துக்களின் மேல் பசை தடவி உப்புத்தூள் மற்றும் glitter கலந்த கலவையைத் தூவவும். பசை காய்ந்து டீத்தூள் நன்றாக அட்டையில் ஒட்டிக்கொண்டதும் அதன் மேல் அலங்காரத்திற்காக கற்கள் ஒட்டவும்.
அடுத்ததாக, இரண்டு செவ்வகத்திற்கு நடுவே இருக்கும் பகுதியில், பசை தடவி, அதன் மேல் கலர் கோலப்பொடியில் க்ளிட்டேர் கலந்து தூவவும்.
அட்டையின் ஓரப்பகுதியில் செய்து வைத்துள்ள பிளாஸ்டிக் பூக்களை வரிசையாக ஒட்டவும்.
பசை நன்றாக காய்ந்ததும், வீட்டின் முன் கதவின் மேலே சுவற்றில் "double tape" கொண்டு ஒட்டிவிடவும்.
இது சுலபமாக வேட்டிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு செய்த ஒரு craft ஆகும்.
நீங்களும் இதை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.
நன்றி...!!!
தேவையான பொருட்கள்
கார்ட்போர்ட் அட்டை (கடையில் வாங்கியது or பார்சல் பாக்ஸ் அட்டை)பிளாஸ்டிக் கேன் (எடுத்துக்காட்டு: பால் டப்பா - empty milk jug)
டீத்தூள்
உப்புத்தூள்
கோலப் பொடி (ஏதேனும் ஒரு கலர் பொடி கலந்தது)
கத்தரிக்கோல்
பைப் க்லினெர் (pipe cleaner or cure pipes - craft கடைகளில் கிடைக்கும்)
க்ளிட்டேர் (glitter)
ஜம்கி (confetti)
பசை, பசை துப்பாக்கி
செய்முறை
முதலில் அட்டையின் ஒரு பக்கம் முழுவதும் வெள்ளை பெயிண்ட் 2-3 தடவை (coating) கொடுக்கவும்.பிளாஸ்டிக் கானில் 2.5 inches மற்றும் 1.5 inches என்று இரண்டு அளவுகளில் நிறைய வட்டம் போட்டு, தனித்தனியாக வெட்டி வைக்கவும்.
வெட்டிவைத்துள்ள வட்டங்களில் பூ இதழ்கள் வரைந்து, அதற்குத் தகுந்தார் போல வெட்டிக்கொள்ளவும்.
பெரிய பூவின் நடுவில் சிறிய பூவை ஒட்டி, பூவின் நடுவில் ஒரு ஜம்கியை ஒட்டவும். இது போல நிறைய பூக்கள் செய்து வைக்கவும்.
அட்டையில் பெயிண்ட் நன்றாக காய்ந்த பிறகு, ஓரங்களையொட்டி 1 inch வித்யாசத்தில் இரண்டு செவ்வக கோடுகள் போடவும். கோடுகளின் மேல் முழு நீளத்திற்கும் கோல்டன் வயர் போல இருக்கும் பைப் க்லினெரை ஒட்டவும்.
இப்பொழுது மூன்று பகுதிகளாக இருக்கும். நடு பகுதியில் "welcome" எழுத வேண்டும். அதற்கு, நடு பகுதி முழுவதும் பசை தடவி அதன் மேல் அடர்த்தியாக டீத்தூள் தூவவும்.
பசை காயுமுன் நடுவில் விரலைக் கொண்டு "WELCOME" என்று அழுத்தி எழுதவும். இப்பொழுது அந்த எழுத்துக்களின் மேல் இருக்கும் டீத்தூள் பெயர்ந்து, எழுத்துக்கள் வெள்ளையாகத் தெரியும்.
எழுத்துக்களின் மேல் பசை தடவி உப்புத்தூள் மற்றும் glitter கலந்த கலவையைத் தூவவும். பசை காய்ந்து டீத்தூள் நன்றாக அட்டையில் ஒட்டிக்கொண்டதும் அதன் மேல் அலங்காரத்திற்காக கற்கள் ஒட்டவும்.
அடுத்ததாக, இரண்டு செவ்வகத்திற்கு நடுவே இருக்கும் பகுதியில், பசை தடவி, அதன் மேல் கலர் கோலப்பொடியில் க்ளிட்டேர் கலந்து தூவவும்.
அட்டையின் ஓரப்பகுதியில் செய்து வைத்துள்ள பிளாஸ்டிக் பூக்களை வரிசையாக ஒட்டவும்.
பசை நன்றாக காய்ந்ததும், வீட்டின் முன் கதவின் மேலே சுவற்றில் "double tape" கொண்டு ஒட்டிவிடவும்.
இது சுலபமாக வேட்டிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு செய்த ஒரு craft ஆகும்.
நீங்களும் இதை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.
நன்றி...!!!
No comments:
Post a Comment