தேவையான பொருட்கள்
பிஸ்ஸா கவர் அல்லது வேறு கார்ட்போர்ட் அட்டைபழங்களை நிரப்பும் ஸ்டாக்கிங் நெட் (நரம்பு அல்லது துணியால் ஆனது)
உள்ளன் நூல் கண்டு
பசை/பசை துப்பாக்கி
கத்தரிக்கோல்
ஜம்கி (confetti)
செய்முறை
முதலில் பிஸ்ஸா கவரின் இரண்டு அட்டைகளிலும் இரண்டு வட்டங்கள் போடவும்.இரு வட்டங்களின் நடுவில் இருக்கும் பகுதிதான் நமக்குத் தேவை. இரண்டு அட்டையிலும் அவற்றை வெட்டி எடுக்கவும்.
இப்பொழுது வெட்டிய அட்டை பார்க்க "ரிங்" போல இருக்கும்.
முதல் அட்டை ரிங்கின் மேலே ஸ்டாக்கிங் நெட்டை முழுவதுமாக ஒட்டி, வெளியே தெரியும் பகுதிகளை நீக்கிவிடவும்.
இரண்டாவது அட்டையை இப்பொழுது முதல் அட்டையின் மேல் ஒட்டவும், நெட் துணி ஒட்டிய பக்கம் நடுவில் வரும்படியாக ஒட்டவும்.
இப்பொழுது, ஒரு சின்னக் கம்பியை மடித்து, அதன் உள்ளே உள்ளன் நூலை நுழைத்து, மறு நுனியை அட்டையின் ஒரு பகுதியில் ஒட்டி, நூலை ரிங் அட்டை முழுவதுமாக சுற்றவும்.
அலங்காரத்திற்காக கற்கள், மணிகள் அல்லது ஜம்கியை நம் விருப்பம் போல நூல் சுற்றிய பகுதியில் ஓட்டலாம்.
கடைசியாக புஷ் பின் கொண்டு சுவற்றில் மாட்டிவிடவும். உங்கள் தொங்கு காதணிகளை நடு பகுதியில் இருக்கும் நெட்டின் மீது மாட்டி தொங்க விடுங்கள்.
மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய அழகான, உபயோகமான craft தயார்.
நீங்களும் இந்த எளிய craft-னை செய்து பாருங்கள். நன்றி...!!!
No comments:
Post a Comment