தேவையான பொருட்கள்:
முட்டை அட்டை
பேப்பர் தட்டு பெரியது 1
பேப்பர் கப் சிறியது 1
கத்தரிக்கோல்
பசை துப்பாக்கி/பசை
க்ளிட்டேர்ஸ்
பெயிண்ட், அலங்கார ஜம்கி
செய்முறை:
டிஷு பூக்கள் செய்யும் முறை:
முதலில் டிஷு ஹோல்டேரை பூவிதழ்கள் போல (படத்தில் உள்ளது போல்) வெட்டிக் கொள்ளவும்.
ஒரு சின்ன வட்டப்பகுதியினை எடுத்து, மடங்கின இடத்தில விரல் கொண்டு கீழாக அழுத்தி, அந்த மடிப்பில் பசை தடவி ஒட்டிவிடவும்.
இப்பொழுது பார்க்க பூ மொக்கு போல இருக்கும். அதை பூவின் நடுவில் ஒட்டவும்.
வேண்டுமானால் பூவில் ஜம்கி மற்றும் க்ளிட்டேர்ஸ் கொண்டு அலங்கரிக்கலாம்.
முட்டை பூக்கள் செய்யும் முறை:
முட்டை அட்டையை பிரித்து, முட்டை வைக்கும் பக்கத்தை தனியாக வெட்டி எடுக்கவும். அதில் உள்ள ஒவ்வொரு குழியையும் தனித்தனியாக வெட்டவும்.
ஒரு குழியை எடுத்து ஆடை படத்தில் காட்டி உள்ளது போல பூ வடிவில் வெட்டவும். இது மிகவும் சுலபம், ஏனென்றால் ஏறக்குறைய முட்டை அட்டையை ஒவ்வொரு குழிப்பகுதியாக நீங்கள் வெட்டும்போதே உங்களுக்கு பூ வடிவம் கேடைதுவிடும். அதை கொஞ்சம் "trim" செய்தால் போதும்.
பூவேலை முடிந்ததும் தொங்கி செய்வது எப்படி என்று பாப்போம்.
முதல் அடுக்கு:
முதை அடுக்கு தொங்கி செய்வதற்கு பெரிய தட்டினை பயன்படுத்த போகின்றோம். தட்டின் ஓரம் முழுவதற்கும் வரிசையாக டிஷு ஹோல்டர் பூக்களை வரிசையாக ஒட்டவும்.
இரண்டாம் அடுக்கு செய்வதற்கு சின்ன கப்பினை பயன்படுத்த போகின்றோம்.
கப்பின் ஓரம் சுற்றி முட்டை அட்டைப் பூக்களை ஒட்டவும்.
கப்பின் வெளிபகுதியில் ஜம்கி ஒட்டவும்.
நான் ஒரு முட்டைப் பூவின் அடிப்பகுதியை பெரிய தட்டின் நடுவில் ஒட்டி, பூவின் இதழ் முனைகளில் பசை தடவி இரண்டாம் அடுக்கினை ஒட்டி உள்ளேன்.
கடைசியாக பசை நன்றாக காய்ந்ததும், தொங்கும் பூக்களை ரூமின் நடுவில் சுவற்றில் மடக்கு ஆணி அடித்து அதில் தொங்க விடவும்.
பார்க்க அழகாக இருக்கும் இந்த "craft" செய்வதற்கும் சுலபமே.
நீங்களும் இதனை செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை கூறுங்கள். நன்றி...!!!
கப்பின் ஓரம் சுற்றி முட்டை அட்டைப் பூக்களை ஒட்டவும்.
கப்பின் வெளிபகுதியில் ஜம்கி ஒட்டவும்.
நடுவில் தொங்கவிட:
நடுவில் தொங்க விட டிஷு ஹோல்டேரில் மொக்கு போல செய்தோமில்லையா அதை ஒன்றன் முனையை இன்னொரு மடக்கு பகுதியில் ஒட்டி ஓட்டினால் செயின் போல வரும், செயினின் ஒரு முனையை கப்பின் நடுவில் ஒட்டவும். இன்னொரு முனையில் மூன்று முட்டை பூக்களை ஒட்டிவிட்டால் பார்க்க அழகாக இருக்கும்.
கடைசி வேலை:
முதல் அடுக்கையும் இரண்டாம் அடுக்கையும் ஓட்டுவதற்கு டிஷு ஹோல்டர் செயின் அல்லது ஒரு முட்டைப் பூவினை பயன்படுத்தலாம்.நான் ஒரு முட்டைப் பூவின் அடிப்பகுதியை பெரிய தட்டின் நடுவில் ஒட்டி, பூவின் இதழ் முனைகளில் பசை தடவி இரண்டாம் அடுக்கினை ஒட்டி உள்ளேன்.
கடைசியாக பசை நன்றாக காய்ந்ததும், தொங்கும் பூக்களை ரூமின் நடுவில் சுவற்றில் மடக்கு ஆணி அடித்து அதில் தொங்க விடவும்.
பார்க்க அழகாக இருக்கும் இந்த "craft" செய்வதற்கும் சுலபமே.
நீங்களும் இதனை செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை கூறுங்கள். நன்றி...!!!
No comments:
Post a Comment