Best out of waste materials!

This blog is to show the "how-to-make" tutorial of beautiful and useful crafts from trash materials like milk can, oil can, waste bottles, waste thermocols, cardboards, dry sticks, dry leaves, groundnut shells, tissue holder etc...

My ENGLISH craft blog: http://saranyajo.blogspot.com/ - Creative DIY crafts

My YOUTUBE channel: https://www.youtube.com/user/saranyascrafts - saranyascrafts

My FACEBOOK page: https://www.facebook.com/saranyajocrafts - Creative DIY crafts

My TAMIL story blog: http://saranyajotamil2.blogspot.com/ - ஆட்டுக்குட்டி


Thursday, December 26, 2013

பேப்பர் ப்ளேட் மற்றும் பிளாஸ்டிக் டப்பாவினைக் கொண்டு செய்த பூ அலங்காரம் (Floral wall craft with paper plates and milk jug!)!

தேவையான பொருட்கள் 

பேப்பர் பிளேட்ஸ்

தேவை இல்லாத பிளாஸ்டிக் டப்பா

கார்ட்போர்ட் அட்டை (உருண்டை வடிவில் வெட்டியது)

பெயிண்ட்ஸ்

பசை துப்பாக்கி

கத்தரிக்கோல்

 

செய்முறை 

முதலில் பேப்பர் ப்ளேட்டின் நடுவில் டம்பளர் வைத்து வட்டம் போடவும். பிறகு பேப்பர் பிளேட்டை பூ வடிவில் சின்னச்சின்ன மெல்லிய கூர்-முனை இதழ்களாக கத்தரிக்கவும். நடு வட்டத்தின் உள்ளே வெட்டிவிடக் கூடாது. மூன்று ப்ளேட்டையும் இதே போல வெட்டிக்கொள்ள வேண்டும்.

பிளாட்டின் இதழ்களை பிரித்தால், இரண்டு இதழ்களாக பிரிந்து வரும். எல்லாவற்றையும், பிரித்த பிறகு பார்த்தால், மேலாக இருப்பது பேப்பராதளால் சுருண்டு பூ மொட்டு போல வந்திருக்கும்.

மூன்று ப்ளேட்களையும் ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டி, பிடித்த வண்ணம் தீட்டவும்.

கார்ட்போர்ட் அட்டைக்கு வெள்ளை வண்ணம் தீட்டி காய விடவும். அதற்குள் பிளாஸ்டிக் டப்பாவில் சின்னச்சின்ன இலைகள் வரைந்து அவற்றை வெட்டி வைக்கவும்.

பிறகு, அட்டையின் ஓரங்களை சுற்றி பிளாஸ்டிக் இலைகளை ஒட்டி, பச்சை அல்லது மயிலிறகு போல வண்ணம் தீட்டவும்.

பெயிண்ட் காய்ந்ததும் பேப்பர் பூவினை நடுவில் ஒட்டவும். பிறகு சுவற்றில் உங்கள் வசதிக்கேற்ப மாட்டிவிடுங்கள்.

இந்த சுவர் அலங்காரம் பார்க்க மிக அழகாக இருக்கும். நீங்களும் இதை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

இந்த craft-ன் செய்முறை video பார்க்க இந்த URL https://www.youtube.com/user/saranyascrafts -லை அழுத்துங்கள்.
                                                              நன்றி...!!!

Monday, December 23, 2013

கொள்ளு பருப்பு விதைகளைக் கொண்டு செய்த பல்லூன் பௌல் (Balloon bowl with gram dhal)!

இது மிக மிக எளிதாக செய்யக்கூடிய ஒரு அழகான "craft" ஆகும். கொள்ளு தான் இதற்கு உபயோகிக்க வேண்டும் என்பது இல்லை, உங்கள் வீட்டில் இருக்கும் எந்த ஒரு பருப்பையும் உபயோகிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

கொள்ளு பருப்பு விதைகள் (gram dhal)
பல்லூன் (balloon)
பசை (glue)

செய்முறை:

முதலில்  பல்லூனை உங்களுக்கு தேவையான அளவிற்கு ஊதிக்கொள்ள வேண்டும்.

 
பிறகு உங்களுக்கு எந்த அளவில் பௌல் வேண்டுமோ அந்த அளவிற்கு பல்லூனின் மேல்புறமாக பசை தடவி அதன் மேல் அடர்த்தியாக விதைகளைத் தூவிக்கொள்ள வேண்டும்.

முதல் கோட்டிங் நன்றாக காய்ந்ததும் (2-3 hrs) மறுபடியும் அதன் மேல் பசை தடவி விதைகள் தூவ வேண்டும். இதை 12 மணி நேரம் காய விட வேண்டும்

நன்றாக காய்ந்ததும் பல்லூனை "pin"னால் குத்தி வெடிக்க வைத்து, பல்லூனை எடுத்துவிட்டால் அழகான "bowl" தயார்.  

நீங்களும் இந்த craft-னை செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை கீழே உள்ள "COMMENT" பகுதியில் குறிப்பிடுங்கள்.
மேலும் எனது மற்ற "craft videos" பார்க்க வேண்டுமானால் இந்த URL https://www.youtube.com/user/saranyascrafts யை அழுத்துங்கள்.
எனது Facebook ID: "Saranya's crafts".
எனது ஆங்கில ப்ளாக் படிக்க http://saranyajo.blogspot.com/ கிளிக் செய்யுங்கள்.
                                                        நன்றி...!!!    
 

Thursday, December 19, 2013

தேங்காய் மூடி பூ கோபுரம் (Coconut shell tower with egg carton flower decoration)

தேங்காய் மூடி மற்றும் முட்டை அட்டையைக்  கொண்டு செய்யப்பட்ட அழகிய பூ கோபுரம் செய்முறை விளக்கம் 

தேவையான பொருட்கள்  

 
தேங்காய் மூடி (coconut shell)
முட்டை அட்டை (egg carton)
திசு பேப்பர் ஹோல்டர் (tissue paper holder) அல்லது ஏதாவது ஒரு பைப்
சிறிய பேப்பர் ப்ளேட் (small paper plate)
பெயிண்ட் (paint)
கத்தரிக்கோல் (scissor)
மணிகள் & க்ளிட்டேர் (தேவையெனில்)
 

செய்முறை

முதலில் முட்டை அட்டையை பகுதி பகுதியாக வெட்டி ஒவ்வொரு முட்டைக் குழியையும் தனியே வெட்டி எடுத்து அதை பூ வடிவில் வெட்டி வைக்கவும்.  
 
பின்னர், தேங்காய் மூடியின் நார்களை சுத்தமாக நீக்கிவிட்டு முட்டை பூக்களை கீழிருந்து ஒவ்வொன்றாக இடைவெளி இல்லாமல் ஒட்டவும்.
 
மூடியின் உச்சியில் கோபுரம் போல் அலங்கரிக்க மெல்லிதாக இருக்கும் பிளாஸ்டிக் கேன் ஒன்றில் கொஞ்சம்  பெரிய சைஸ் பூ வரைந்து, வெட்டி எடுத்து, அந்தப்  பூவின் நுனிகளை நடுவிற்கு கொண்டு வந்து (மடக்கி) ஒட்ட வேண்டும். அதன் மேல் ஒரு பாதி விரிந்தது போல் வெட்டிய முட்டை பூவை வைத்து ஒட்டினால் பார்க்க பூ கோபுரக்கவசம் போல அழகாக இருக்கும். 
 
பூக்களுக்கு வண்ணம் தீட்டி காய விடவும். தேங்காய் மூடியின் உள் பகுதியில், திசு பேப்பர் ஹோல்டர் அல்லது ஒரு 1/2 முலம் நீளமான பிளாஸ்டிக் பைப்பினை  ஒட்டிக்கொள்ள வேண்டும். பைப்பின் இன்னொரு நுனியை ஒரு பேப்பர் பிளேடின் நடுவில் ஒட்டவும்.
 
இப்பொழுது குடை போன்ற வடிவில் பூ கோபுரம் பார்க்க அழகாக இருக்கும். பைப் மற்றும் ப்ளேட்க்கு பெயிண்ட் செய்யவும். வேண்டுமானால் ஒவ்வொரு பூவின் நடுவிலும் கற்கள் அல்லது மணிகள் பதிக்கலாம். கோபுரம் முழுவதும் லேசாக பெயிண்ட் காய்வதற்கு முன் க்ளிட்டேர் தூவலாம்.
 
 
இப்பொழுது மிக அழகான பூ கோபுரம் தயார். இதன் செய்முறையை வீடியோவாக பார்க்க விரும்பினால் http://youtu.be/bvQhcJgigRw -லைக் கிளிக் செய்யுங்கள்.
 
 
நீங்களும் இந்த அழகான கிராப்டினை செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
                                                           நன்றி...!!!

பேப்பர் ட்ரீ (Tree craft)!

பேப்பர் ப்ளேட்டை கொண்டு செய்த பேப்பர் ட்ரீ (Tree craft made with paper plates and tissue holder)! 

எதையாவது கொஞ்சம் வித்யாசமாக முயற்சிக்கலாமே என்று யோசித்தபோது இந்த "paper tree craft" செய்து பார்க்கலாமே என்று தோன்றியது. எனக்குத் தோன்றியதை இங்கே முயற்சித்திருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

தேவையான பொருட்கள் 

பேப்பர் பிளேட்ஸ் - 5 (paper plates - reused)

சின்ன ஐஸ் கிரீம் ப்ளேட் - 1 (one ice cream plate) 

திசு ஹோல்டர் (tissue paper holder)

பெயிண்ட்ஸ் (paints)

க்ளிட்டேர் (optional)

பசை, பசை துப்பாக்கி (glue, glue gun)  

 

செய்முறை

இந்து பேப்பர் ப்ளேட்களையும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவுகளில் (பெரியது முதல் சிறியது வரை) படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல வெட்டிக்கொள்ளுங்கள். வெட்டிய மீதித் தேவையில்லாத காகித துண்டுகளை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.


பிளேட்டின் வெட்டிய ஓரங்களை உள்பக்கமாக மடக்கி விடுங்கள். பின்பு திசு ஹோல்டரை வேண்டிய நீளத்திற்கு வெட்டி, ப்ளேட்டின் நடுவே ஒட்டுங்கள் (செடி அல்லது மரத்தின் தண்டு போல). தண்டின் இன்னொரு நுனியை சின்ன ஐஸ் கிரீம் ப்ளேட்டின் நடுவில் படத்தில் உள்ளது போல ஒட்டுங்கள்.

இது போல வெட்டி வைத்துள்ள மற்ற ப்ளேட்களையும் ஒன்றன் மேல் ஒன்றாக திசு ஹோல்டரின் உதவியுடன் ஓட்டுங்கள். கீழே பெரிதாகவும் மேலே குருகியதாகவும் பார்க்க மரம் போல இருக்க வேண்டும்.

கடைசி உச்சி பகுதி செய்வதற்கு, வெட்டிவைத்துள்ள தேவையில்லாத காகித துண்டுகளை, இலை போல வெட்டி திசு ஹோல்டரைச் சுற்றி ஒட்ட வேண்டும் (படம் பார்க்க). இதை மேலே கடைசியாக உள்ள ப்ளேட்டின் நடுவே ஒட்ட வேண்டும். இப்பொழுது பார்க்க மரம் போல வந்திருக்கும்.

பிறகு உங்களுக்கு பிடித்தது போல பெயிண்ட் செய்து வேண்டுமானால் இலைகளின் மேல் பசை தடவி க்ளிட்டேர் தூவிக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான், ஒரு அழகான tree craft தயார் ஆகிவிட்டது. இதன் செய்முறையை விளக்குவதற்கு சற்று கடினமாக இருந்தாலும், செய்வதற்கு எளிதான ஒன்றுதான். நீங்களும் இந்த craft-னை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

Monday, December 16, 2013

சால்ட் டின் மற்றும் வுல்லன் நூல்  கொண்டு செய்த அழகிய பேனா ஸ்டான்ட் (Beautiful pen (spoon or brush) holder with salt tin and woollen thread)  

தேவையான பொருட்கள் 

சால்ட் டின் அல்லது நீளமாக இருக்கும் எதாவது ஒரு காலி டப்பா (salt tin)
 
கொஞ்சம் தடிமனாக இருக்கும் வுல்லன் நூல் கண்டு (thick woollen bundle)
 
பார்சல் கவர் (உள்பக்கம் பபுள் பேப்பர் ஓட்டபட்டிருக்கும்) (parcel bubble cover)
 
பெயிண்ட் (paint )
 
பசை அல்லது பசை துப்பாக்கி (glue or glue gun ) 

செய்முறை 

முதலில் சால்ட் டின்னின் மேல் ஒட்டியிருக்கும் பேப்பரையும் மூடிபகுதியையும் நீக்கிவிட்டு , எவ்வவளவு நீளம் வேண்டுமோ அதை மார்க் செய்து அதிகமான பகுதியை வெட்டி எடுத்துவிடவும்.
 
பிறகு வுல்லனின் முனைப்பகுதியை டின்னோடு ஒட்டி, கீழிருந்து மேலாக நெருக்கமாக சுற்றவும். டின் முழுவதும் சுற்றிய பிறகு, நுனியை டின்னோடு பிரியாது ஒட்டிவிடவும்.
 
பபுள் கவரை பூ, சதுரம், போல சின்னச்சின்னதாக வெட்டி, டின்னின் மேல் ஒட்டி (எடுத்துகாட்டுக்கு படத்தில் இருப்பது போல), பிடித்தமான வண்ணம் தீட்டவும்.
 
வேண்டுமானால் அலங்காரத்திற்கு க்ளிட்டேர் தூவலாம் அல்லது மணிகள் ஒட்டலாம். 
 
அவ்வளவுதான் வேலை... பத்தே நிமிடங்களில் செய்யக்கூடிய உபயோகமான இந்த பேனா ஸ்டான்டினை  நீங்களும் உங்கள் கற்பனை போல செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் பகுதியில் குறிப்பிடுங்கள்.
 
இந்த craft-ன் செய்முறையை video -வாக பார்க்க, இந்த URL https://www.youtube.com/user/saranyascrafts -லை அழுத்துங்கள். ஆங்கிலத்தில் படிக்க http://saranyajo.blogspot.com/ -லை அழுத்துங்கள்.
                                                  நன்றி...!!!

Sunday, December 15, 2013

கார்ட்போர்ட் அட்டையில் அழகான பெயிண்டிங் (Cardboard painting!)

தேவையான பொருட்கள் 


கார்ட்போர்ட் அட்டை

பெயிண்ட்

நிலக்கடலைத் தோட்கள்

பிஸ்தா ஓடுகள்

மணிகள்

 

 

செய்முறை

கார்ட்போர்ட் அட்டையை சதுரமாக வெட்டி அழகாக பெயிண்ட் (உங்களுக்கு பிடித்த எதாவது ஒரு பெயிண்டிங்) செய்து கொள்ளவும் (எடு: படத்தைப் பார்க்கவும்).

பெயிண்டிங்கின் மேலும் உள்ளும் தோட்களைக் கொண்டு அலங்கரிக்கவும்.

 உங்களுக்கு பிடித்தமான பெயிண்டிங்கை உங்கள் விருப்பம் போல வரையுங்கள். நீங்கள் வரைந்து பழகுவதற்கு இது  வாய்ப்பாகவும் இருக்கும், அதே சமயம் ஒரு நல்ல "wall craft" செய்தது போலவும் இருக்கும். நான் வரைய கற்றுக்கொண்டதும் இப்படித்தான்.
படத்தில் இருக்கும் ஆர்ட் ஒரு ஐடியா தான். உங்கள் விருப்பம் போல் பிடித்தமாதிரி வரைந்து, சுவற்றில் மாட்டி, உங்கள் வீட்டினை அழகுபடுத்துங்கள்.
                                                      நன்றி...!!!

 

Saturday, December 14, 2013

மணல் மற்றும் க்ளிட்டேர் கலவையில் ஆன ரங்கோலி (Cardboard rangoli wall art with sand + glitter mixture)!

இப்பொழுதெல்லாம் எங்கே பார்த்தாலும் "flat system" வந்துவிட்டது, வாசல் தெளித்து கோலம் போடுவதற்கு வாய்ப்பே இல்லை. அனால் நாம் நினைத்தால் நம் சுவற்றிலேயே அழகான கோலங்களை தொங்க விடலாம். அப்படிப்பட்ட ஒரு அழகான ரங்கோலி கிராப்ட்டினை தான் இந்த பகுதியில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

மணல்
க்ளிட்டேர்
பசை
அட்டை

செய்முறை 

ஒரு பாக்ஸ் அட்டையை ஓரங்களில் துணுக்குகள் இல்லாமல் நேரான சுதுரமாக வெட்டிக்கொள்ளவும்.

உங்களுக்கு பிடித்தமான ரங்கோலியை அவுட்லைனாக ஸ்கெட்ச் (தேவையெனில்) செய்து, அதன் மேலும் உள்ளும் பசை தடவி, மணல் + க்ளிட்டேர் கலந்த கலவையால் அழகு படுத்தவும். இது எப்படியென்றால், நாம் கோல மாவில் கலர் பொடிகள் கலப்போம் இல்லையா, அது போல மணலில் கலர் கலரான க்ளிட்டேர்ஸ் கலந்து அலங்கரிக்கவும்.

ரங்கோலி முடிந்ததும் பார்டர் கொடுத்து, பசை நன்றாக காய்ந்ததும், சுவற்றில் டபுள் டேப் கொண்டு ஓட்டலாம் அல்லது ஆணி உபயோகித்து சுவற்றில் தொங்க விடலாம்.

மிக மிக எளிதான இந்த ரங்கோலி கிராப்ட்டினை நீங்களும் செய்து பார்த்து  உங்கள் கருத்துக்களை கூறுங்கள். இதன் செய்முறையை "video"-வாக பார்க்க விரும்பினால் இந்த URL http://youtu.be/nFomqg9OKyY -லைக் கிளிக் செய்யுங்கள்.
                                                          நன்றி...!!!

Friday, December 13, 2013

நிலகடலைத் ஓடு மற்றும் கலர் ஸ்டோன்ஸ் கொண்டு செய்த அழகிய ரங்கோலி (Beautiful rangoli wall craft with groundnut shells and color stones!)!

தேவையான பொருட்கள் 

நிலக்கடலைத் தோட்கள்

கலர் ஸ்டோன்ஸ்

மணிகள்

கார்ட்போர்ட் அட்டை

பசை (glue)

பெயிண்ட்

செய்முறை 

கார்ட்போர்ட் அட்டையை வேண்டிய அளவுக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டி, கலர் (background) செய்து கொள்ளுங்கள்.

ஒரு ரங்கோலியை அவுட்லைனாக வரைந்து (example: படத்தில் உள்ளது போல) அதன் மேல் நிலக்கடலை தோட்கள் ஒட்டவும். உள்ளே அலங்காரம் (decorate) செய்வதற்கு கலர் கற்களை பசை தடவி ஒட்டவும்.

அட்டையின் ஓரம் சுற்றி மணிகள் கொண்டு அலங்கரிக்கவும். பசை நன்றாக காய்ந்த பிறகு புஷ் பின் அல்லது டபுள் டேப் (push pin or double tape) கொண்டு சுவற்றில் ஒட்டிவிடவும்.

இது மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஒரு ரங்கோலி கிராப்ட் ஆகும். நீங்களும் இதை செய்து பாருங்கள், உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
                                                    நன்றி...!!!

இரட்டை மயில் அட்டை அலங்காரம் (Lovable twin peacock cardboard wall art!)!

தேவையான பொருட்கள் 

பிளாஸ்டிக் கேன்
பெயிண்ட்
பசை துப்பாக்கி (glue gun)
கத்தரிக்கோல்
க்ளிட்டேர்
கார்ட்போர்ட் அட்டை

செய்முறை 

முதலில் பிளாஸ்டிக் கேனில் இரட்டை மயிலின் உடம்புப் பகுதியை மட்டும் (படத்தில் உள்ளது போல) வரைந்து, வெட்டி வைக்கவும்.

பிறகு, ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு, நீர்த்துளி  வடிவத்தில், நிறைய மயில்  தோகை வரைந்து அவற்றையும் வெட்டி வைக்கவும்.

 தோகை மற்றும் உடம்புப் பகுதிகளை இணைத்து
பசை துப்பாக்கி (glue gun) கொண்டு ஒட்டவும். அப்பொழுதுதான் பிளாஸ்டிக் நன்றாக ஒட்டும்.

படத்தில் உள்ளது போல தொகை வந்தவுடன், உங்களுக்கு பிடித்தமாதிரி பெயிண்ட் செய்யுங்கள் .

பெயிண்ட் நன்றாக காய்ந்தவுடன், ஒவ்வொரு மயில்கண் மேலேயும் பசை தடவி க்ளிட்டேர் தூவவும்.

அட்டையை "heart" வடிவத்தில் வெட்டி, கலர் செய்யவும். பிளாஸ்டிக் கேனில் பூ அல்லது இலை போல வரைந்து, வெட்டி, பெயிண்ட் செய்து, அட்டையின் ஓரத்தை அலங்கரிக்கவும்.

மயிலை அட்டையின் நடுபகுதியில் ஒட்டவும். இப்பொழுது ஒரு அழகான இரட்டை மயில் அலங்காரம் தயார்.
இதன் செய்முறையை "video" வாக பார்க்க வேண்டுமானால் இந்த URL http://youtu.be/x0Pml9-y2UY -லைக் கிளிக் செய்யுங்கள்.
                                                            நன்றி...!!!
 

Thursday, December 12, 2013

பார்சல் பாக்ஸ் அட்டையில் செய்த பூ அலங்காரம் (Parcel box cardboard wallcraft!)

இந்த கிராப்ட் செய்வதற்கு மிக எளிதானது. உங்கள் கற்பனையைத் தவிர வேறு ஏதும் பெரிதாக இதற்கு தேவை இல்லை. இப்பொழுது இதன் செய்முறையைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

தேவையில்லாத பாக்ஸ் அட்டை
பெயிண்ட்
க்ளிட்டேர்
கலர் ஸ்டோன்ஸ் (அல்லது ஜம்கி, மணிகள் போல உங்களிடம் இருக்கும் வேறு அலங்காரப் பொருள்)

செய்முறை 

முதலில் அட்டையை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டி, வெள்ளை பெயிண்ட் செய்துகொள்ளுங்கள்.

பென்சிலால் பெரிய பெரிய பூக்கள் வரைந்து வண்ணம் தீட்டி காய விடுங்கள்.

பிறகு பூக்களின் அவுட்லைனின் மேல் படத்தில் உள்ளது போல பசை தடவி க்ளிட்டேர் தூவிக்கொள்ளுங்கள். வேண்டுமானால் க்ளிட்டேர் ஸ்கெட்ச் (liquid glitter glue) உபொயொகிக்கலம்.

பூக்களின் நடுவில் கலர் ஸ்டோன்ஸ் அல்லது மணிகள் ஒட்டவும்.

இப்பொழுது, அழகான கராப்ட் தயார். இதை சுவற்றில் ஆணி கொண்டு மாட்டலாம் அல்லது டபுள் டேப் (double tape) கொண்டு ஒட்டி விடலாம். மங்கலான வெளிச்சத்தில் பார்க்க இன்னும் மினுமினுப்பாக அவ்வளவு அழகாக இருக்கும்.
நீங்களும் இதை செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
                                                                 நன்றி...!!!

பேனா ஸ்டாண்ட்

பபுள் கவர் மற்றும் பிளாஸ்டிக் டப்பாவைக் கொண்டு செய்த பேனா ஸ்டாண்ட் (Easy pen (spoon or brush) holder with salt tin and bubble cover!)

தேவையான பொருட்கள் 

எதாவது ஒரு கொஞ்சம் நீளமான டப்பா

பபுள் கவர்

பெயிண்ட்

பசை துப்பாக்கி

அலங்காரம் செய்வதற்கு ஜம்கி, க்ளிட்டேர், etc (வேண்டுமானால்)

 

செய்முறை

முதலில் டப்பாவின் மேல் ஒட்டியிருக்கும் பேப்பரை எடுத்துவிட்டு, அதனைச் சுற்றி பபுள் பேப்பரினை பசை துப்பாக்கி (அல்லது உடனே ஒட்டிக்கொள்ளும் பசை) கொண்டு ஒட்டவும்.

பபுள் பேப்பரின் மேல் உங்களுக்கு பிடித்தமான டிசைனில் பெயிண்ட் செய்யவும்.

பெயிண்ட் காய்ந்த பிறகு ஜம்கி, க்ளிட்டேர் அல்லது உங்களிடம் இருக்கும் அலங்காரப் பொருட்கள் கொண்டு அலங்கரிக்கவும். உங்களிடம் ரிப்பன் துணி இருந்தால், மேல் விளிம்பிலும், கீழ் விளிம்பிலும் சுற்றி ஓட்டலாம், பார்க்க அழகாக இருக்கும்.

அவ்வளவுதான், ஒரு நல்ல உபயோகமான கைவினைப் பொருள் நம் கைகளில்...! இதன் செய்முறையை வீடியோவாக பார்க்க, இந்த URL http://youtu.be/Qf_mpXV12fI -லைக் கிளிக் செய்யுங்கள்.
இந்த சுலபமான பேனா அல்லது ஸ்பூன் ஸ்டான்டினை நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள "கமெண்ட்"-ல் குறிப்பிடுங்கள்.
                                                      நன்றி...!!!
 

Wednesday, December 11, 2013

பபுல் கவர் கொண்டு செய்த அழகிய ரங்கோலி சுவர் அலங்காரம் (Bubble cover rangoli wall craft)

பொதுவாக நாம் வாங்கும் வாங்கும் பார்சல்களில் உள்ளே உள்ள பொருள் பபுல் கவரால் சுற்றப்பற்றிருக்கும். அந்த பப்புல் கவரைக் கொண்டு நாம் நிறைய crafts பண்ணலாம். அதில் ஒன்றுதான் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த அழகிய பப்புல் கவர் ரங்கோலி சுவர் அலங்காரம்.

தேவையான பொருட்கள்

பபுல் கவர் (bubble cover)

கார்ட்போர்ட் அட்டை (waste parcel cardboard)

பெயிண்ட் (Paint )

டக் டேப் (Duck tape)

பசை (Glue)

க்ளிட்டேர் (Glitter)

செய்முறை 

அட்டையை சதுரமாக வெட்டிக்கொண்டு, அதன் மேல் பப்புல் கவரை சுற்றி ஓரத்தை டக் டேப் கொண்டு ஒட்டிவிட வேண்டும்.

பிறகு, நடுவிலிருந்து ஒவ்வொரு பபுளையும் இணைக்கும் வகையில் ரங்கோலி பெயிண்ட் செய்ய வேண்டும் (எடுத்துக்காட்டு: கீழே கொடுத்துள்ள படம்).

ரங்கோலி வரைந்த பிறகு, அட்டையின் ஓரம் சுற்றி கருப்பு கலர் கொடுத்தால் ரங்கோலி நல்ல எடுப்பாக தெரியும். பார்டருக்கு ஜம்கி மற்றும் க்ளிட்டேர் கொண்டு அழகுபடுத்துங்கள்.

அவ்வளவுதான், ஒரு அழகான ரங்கோலி ஆர்ட் தயார். இதனை டபுள் டேப் (double tape) அல்லது புஷ் பின் (push pin) கொண்டு சுவற்றில் ஒட்டிவிடுங்கள்.

நீங்கள் புதிதாக ரங்கோலி கற்றுக் கொள்பவராக இருந்தால் பபுள் பேப்பரில் பழகுங்கள். புள்ளி வைத்து கோலம் போடுவது போல் இதில் ரங்கோலி வரைய மிக அருமையாக வரும். நீங்களும் இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள "COMMENT" பகுதியில் குறிப்பிடுங்கள்.
                                                         நன்றி...!!!

Tuesday, December 10, 2013

நிலக்கடலைத் தோலில் செய்த பூஜாடி (Groundnut shell flower vase!)

பொதுவாக நிலக்கடலைத் தோலை நாம் உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு குப்பையில் போட்டுவிடுவோம். அனால் இதைக் கொண்டு பல உபயோகமான அழகான கைவினைப் பொருட்களைச் செய்யலாம். அதில் ஒன்றாக, நிலக்கடலைத் தோலில் செய்த பூஜாடியின் செய்முறையை இங்கே கொடுத்திருக்கிறேன். நீங்களும் இந்த craft -னை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள "COMMENT" பகுதியில் குறிப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள் 


நிலக்கடலைத் தோல் (கடலைக்காயின் மேல் இருக்கும் ஓடு)
பெயிண்ட் (Paint)
க்ளிட்டேர் (Glitter)
பார்பெகு ஸ்டிக்ஸ் (அல்லது காய்ந்த குச்சிகள்)
பசை (Glue)

செய்முறை 


இது மிக மிக எளிதான ஒரு கிராப்ட் ஆகும். முதலில் குச்சியின் கூர் முனையில் நிலக்கடலைத் தோல் ஒன்றொன்றாக பூப்போல சுற்றி பசை துப்பாக்கி கொண்டு ஒட்டவும்.

நான்கைந்து அடுக்கு வந்த பிறகு (அடுக்கு பூ வடிவில்) நல்ல நிறத்தில் ஓட்டின் நிறம் தெரியாதது போல் பெயிண்ட் செய்யவும்.

பெயிண்ட் காய்ந்தவுடன் ஓட்டின் மேல் பசை தடவி க்ளிட்டேர் தூவவும்.

தன்டிற்கு பச்சை நிறம் பூசி, ஒற்றை கொட்டை கொண்ட சின்னச்சின்ன தோலை இலை போல ஒட்டி வண்ணம் கொடுக்கவும்.

இது போல இன்னும் சில பூக்கள் செய்து ஒரு பாட்டில் அல்லது திசு பேப்பர் ஹோல்டரை அலங்கரித்து அதில் கொஞ்சம் மண் நிரப்பி பூக்களை அதில் செருகவும்.

இப்பொழுது அழகான பூக்குவளை தயார்.
 இந்த செய்முறையை video-வாக பார்க்க வேண்டுமானால், இந்த URL http://youtu.be/EFOg4qdtB2g -லைப் கிளிக் செய்யுங்கள்.
                                                          நன்றி...!!!


 

Sunday, December 8, 2013

டோர் ஹாங்கிங்

போம் ஷீட், திசு பேப்பர் ஹோல்டர் மற்றும் பிளாஸ்டிக் கேன் கொண்டு செய்த டோர் ஹாங்கிங் (Door hangings with foam sheet, tissue paper holder and plastic can - a different idea)


தேவையான பொருட்கள் 


போம் ஷீட் (foam sheet)
திசு பேப்பர் ஹோல்டர் (tissue paper holder)
பிளாஸ்டிக் கேன் (plastic can)
பெயிண்ட் (paint)
கத்தரிக்கோல் (scissor)
உல்லன் நூல் (woollen thread)

செய்முறை 


நான் மூன்று பொருட்கள் பொருட்கள் இந்த க்ராப்டிற்கு பயன்படுத்தி இருக்கிறேன் - போம் ஷீட்டில் செய்த மணிகள், திசு ஹோல்டரில் செய்த பூக்கள் மற்றும் பிளாஸ்டிக் கேனில் செய்த பூக்கள்.

போம் மணிகள்:

(பார்க்க பெரிய பாரா போல தெரிந்தாலும் இதை செய்வது சுலபந்தான்)

போம் ஷீட்டில் 20 cm இடைவெளியில் இரு கோடுகள் இழுங்கள்.
பிறகு ஒரு கோட்டின் மேல் ஸ்கேல் வைத்து ஒவ்வொரு 1 inch-க்கும் புள்ளி வையுங்கள்.

அதே போல் இன்னொரு கோட்டின் மேல் 1 inch இடைவெளியில், அனால் முதல் கோட்டின் புள்ளிகளுக்கு நேராக இருக்காமல் நடுநடுவில் வர வேண்டும் (அதாவது நாம் சந்துப்புள்ளி வைத்து கோலம் போடுவோமில்லையா, அது போல).

இப்பொழுது இரு கோட்டின் புள்ளிகளையும் ஜிக் ஜாக்காக இணையுங்கள். ஒவ்வொன்றும் நீளமான முக்கோணம் போல இருக்கும்.
அந்த ஒவ்வொரு கோடையும் கத்தரியுங்கள்.

இப்பொழுது உங்கள் கையில் நீளமான முக்கோண வடிவில் வெட்டப்பட்ட போம் சீட் இருக்கும். ஒரு நேரான குச்சியை (chop stick) எடுத்து முக்கோணத்தின் அகலமான முனையின் மேல் வைத்து  பிடித்து, மறு கையால் ஷீட்டினை உருட்டி சுற்றுங்கள். கூர் முனை வந்ததும் கொஞ்சம் பசை தடவி ஒட்டிவிடுங்கள்.


 

இப்பொழுது அழகான மணி வந்திருக்கும்.
வீடியோவாக பார்க்க இந்த URL http://youtu.be/PaORNZ9J3IM -லைக் கிளிக் செய்யுங்கள்.

திசு பூக்கள்:

திசு ஹோல்டர் என்பது திசு பேப்பர் பண்டல் (bundle) நடுவில் இருக்கும் tube அட்டை. இந்த ட்யூபை முழு நீளத்திற்கு கத்தரிக்கவும்.

இப்பொழுது நீல பேப்பர் போல இருக்கும். அதை ஒரே அளவில் மூன்றாக கட் செய்யவும். பின்பு இரண்டு இரண்டு இன்ச்சாக கட் செய்யவும்.

படத்தில் இருப்பது போல சின்னச்சின்னதாக கட் செய்து உருட்டி வெளிபகுதியில் பசை தடவி ஒட்டிவிடவும். பூவிற்கு வண்ண தீட்டி காயவிடவும்.

பிளாஸ்டிக் பூக்கள்: 

பிளாஸ்டிக் கேனில் பூ வரைந்து கட் செய்து பெயிண்ட் அடித்து காய விட்டு பூவின் நடுவில் punching machine கொண்டு ஓட்டை போடுங்கள்.

டோர் ஹாங்கிங்:

மேலே குறிப்பிட்டுள்ள மூன்றையும் உங்கள் விருப்பம் போல மொத்தமான நூலில் கோர்த்து கதவில் அழகாக தொங்க விடுங்கள்.


சூப்பரான ஒரு டோர் ஹாங்கிங்கை நீங்களே செய்து தொங்க விடுங்கள். உங்கள் வீட்டினரை அசத்துங்கள்.
உங்கள் கருத்துகளையும் சந்தேங்களையும் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள "COMMENT"-ல் குறிப்பிடுங்கள்.
                                                 நன்றி...!!!



 
Related Posts Plugin for WordPress, Blogger...