ஒரு பிளாஸ்டிக் கேன், ஒரு glue gun, ஒரு கத்தரிக்கோல், கொஞ்சம் paints இருந்தால் போதும், நம் வீட்டை அலங்கரிப்பதற்கு.
இந்த பூ அலங்காரமும் அப்படி செய்ததுதான்.
மிக எளிமையான, மிக அழகான ஒரு அலங்காரம் இது.
இதன் செய்முறையை தமிழில் வீடியோவாக பார்க்க இங்கே சொடுக்கவும்.
தேவையான பொருட்கள்:
பிளாஸ்டிக் கேன்
காட்டன் பட்ஸ்
கத்தரிக்கோல், மார்கர் பென்
வயர், floral tape
செய்முறை:
பிளாஸ்டிக் கேனில் ஒரு மூடியை வைத்து வட்டங்கள் வரையவும்.
அதை outline-ஆக வைத்து அதற்குள், படத்தில் இருப்பது போல் பூக்கள் வரைந்து கொள்ளுங்கள்.
அவற்றை தனித்தனிப் பூக்களாக வெட்டி வைக்கவும்.
பூக்களின் இதழ்களை கொஞ்சம் வளைத்து விடுங்கள்.
பூக்களுக்கு ஒரே மாதிரி வண்ணம் தீட்டுங்கள்.
காட்டன் பட்ஸ் எடுத்து, அதன் இரு பஞ்சு மொட்டுகளையும் தனியே வெட்டி வைக்கவும்.
பஞ்சு மொட்டினை பூவின் நடுவில் ஒட்டவும்.
குச்சிகளை பூவின் பின்னால் தண்டு போல ஒட்டுங்கள்.
இந்த அலங்காரத்திற்கு 30-40 பூக்கள் தேவைப்படும்.
அதே போல, பிளாஸ்டிக் கேனில்இலைகள் வரைந்து வெட்டி எடுக்கவும்.
என் வீடியோவில் காட்டி இருப்பது போல மடித்தால், பிளாஸ்டிக் இலையில் இலைக் கோடுகள் விழுந்து பார்க்க அழகாக இருக்கும்.
இலைகளுக்கு பச்சை கலர் கொடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு சின்ன தெர்மோகோல் பீஸ் எடுத்து அதை ஒரு கம்பியில் செருகி, பசை கொண்டு ஒட்டி விடுங்கள். (sorry, அதுக்குமேல போடோஸ் எடுக்க மறந்துட்டேன்.)
அதைச் சுற்றி பூக்களை ஒவ்வொன்றாக ஒட்டுங்கள். சூடான பசை உடனே காய்ந்து , நன்றாக ஒட்டிகொல்வதால் பூக்கள் பிரிந்து வராது.
அரைப் பந்து போல பூக்கள் வந்ததும் கடைசியாக இலைகளை ஒட்டுங்கள்.
கம்பிக்கு floral tape சுற்றிவிட்டால் பார்க்க நிஜ தண்டு போல இருக்கும்.
அதை ஒரு பூ ஜாடியில் செருகி வைத்தால் பார்க்க சூப்பராக இருக்கும்.
செய்து பாருங்கள், உங்கள் கருத்துக்களை கூறுங்கள். நன்றி ! வணக்கம் !