தேவையான பொருட்கள்
பிளாஸ்டிக் கேன் (வெள்ளை)கத்தரிக்கோல்
பசைத் துப்பாக்கி
பெயிண்ட்ஸ்
பேப்பர்
ப்லோரல் டேப் (green floral tape)
செய்முறை
கானில் இதழ்கள் வரைந்து வெட்டிக்கொள்ளவும்.பூவின் நடு மகரந்த தண்டுகள், படத்தில் உள்ளது போல வெட்டிக்கொள்ளுங்கள்.
பேப்பர் தண்டின் ஒரு தளவில், மகரந்த குச்சிகளை (stamen - அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை) ஒன்றாக சேர்த்து, பசைத்துப்பாக்கி கொண்டு ஒட்டவும்.
பிறகு, இதழ்களை ஒட்டுங்கள்.
பேப்பர் தன்டிற்கு ப்லோரல் டேப் சுற்றவும்.
கேனை நீளமாக வெட்டி, நீளமான இலைகள் வரைந்து, வெட்டி எடுத்து, நடுவில் கோடு போல மடித்துவிட்டு, மறுபடியும் நேராக எடுத்துவிட்டு வைக்கவும்.
பூக்களுக்கும் இலைகளுக்கும் வண்ணம் கொடுங்கள்.
4-5 பூக்கள் செய்து, தண்டுகளை ஒன்றாக சேர்த்து கட்டி அதன் மேல் ப்லோரல் டேப் சுற்றி, அதன் மேல் இலைகள் நெருக்கமாக ஒட்டி அதன் மேல் டேப் சுற்றவும்.
ஒரு பேப்பர் கப் எடுத்து அதில் கோதுமை மாவு கெட்டியாக பிசைந்து அதில் நிரப்பி, இந்த தண்டை செருகவும்.
அதை வெயிலில் கொஞ்ச நேரம் வைத்தால் மாவு காய்ந்து தன்டு நன்றாக பிடித்துக் கொள்ளும்.
இந்தப் பூக்கள் பார்க்க அழகாக இருக்கும். நன்றி !
No comments:
Post a Comment