அரிசிப் பை (அல்லது துணிப் பை) தேவை இல்லாமல் இருந்தால் அதைக் கொண்டு அழகான கைவினைகள் செய்யலாம். அதில் ஒன்றுதான் இந்த மலர் அலங்காரம்...
அரிசிப் பை (அல்லது துணிப் பை)
பார்சல் பாக்ஸ் அட்டை
பசை துப்பாக்கி
அலங்கார கற்கள்
அரிசிப் பையை குறுக்குவாக்கில் சின்னச்சின்னதாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வெட்டிய பகுதியினை கையில் பிடித்து ஒரு முனையை படத்தில் உள்ளது போல மடித்துக் கொள்ளவும்.
மடித்த முனையை பிடித்து ஒரு ஒரு இன்ச் நீல அளவிற்கான துணியை சுருட்டிக் கொண்டே வரவும்.
பிறகு, நன்றாக அழுத்திப் பிடித்துக் கொண்டு துணியை ஒரு முறுக்கு முறுக்கி பூவோடு சுற்றவும்.
ஒரு முறுக்கு - ஒரு சுற்று என்பதாக பூவின் முனை வரை சுற்றவும்.
முனையை பசை துப்பாக்கி கொண்டு பசை தடவி பூவின் அடியில் ஒட்டவும்.
பூவின் அடியில் தொங்கிக் கொண்டிருக்கும் அதிகப்படி துணியை வெட்டிவிடவும்.
இதே போல நிறைய பூக்களை செய்து கொள்ளுங்கள்.
முதல் பூ செய்யும்போது கொஞ்சம் சிரமம் போல தெரியும், 2-3 பூக்களை செய்து முடித்த பிறகு, இது மிக மிக எளிதாக தோன்றும். ஒரு நிமிடத்தில் 2 பூக்கள் செய்து விடலாம். துணியை முறுக்கி முறுக்கி சுற்றினால் முடிந்தது.
மலர் அலங்காரம்:
பூக்கள் தேவையான அளவு செய்த முடித்த பிறகு ஒரு பாக்ஸ் அட்டையை எடுத்து அதை "ரிங்" போல வெட்டவும்.
அதில் பூக்களை ஒவ்வொன்றாக பசை துப்பாக்கி கொண்டு ஒட்டவும்.
கொஞ்சம் இரண்டு ஓரங்களிலும் இடம் விட்டு பூக்களை ஒட்டவும்,
அப்போதுதான் ஓரங்களில் கற்களை ஓட்டமுடியும்.
பூக்களை முழுவதுமாக ஒட்டி முடித்தும், இரண்டு ஓரகளிலும் கற்கள் ஒட்டவும்.
நான் பச்சை மற்றும் சிகப்பு நிற ரெசின் கற்களை ஒட்டி உள்ளேன்.
உங்களுக்கு இந்த கற்கள் கிடைக்கவில்லை என்றால் பெரிய சைஸ் மணிகள் அல்லது சிறு கற்கள் அல்லது கூலங்கற்களில் நெயில் பாலிஸ் அடித்து ஓட்டலாம்.
பசை காய்ந்து கற்கள் நன்றாக ஒட்டிய பிறகு, சுவற்றில் ஆணி கொண்டு மாட்டிவிடலாம்.
இந்த கைவினை செய்வதற்கு சுலபம், பார்க்கவும் அழகாக இருக்கும்.
நீங்களும் இதை செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை பகிருங்கள். நன்றி!
தேவையான பொருட்கள்:
பார்சல் பாக்ஸ் அட்டை
பசை துப்பாக்கி
அலங்கார கற்கள்
செய்முறை:
அரிசிப் பை ரோஸ்:
முதலில் அரிசிப் பையில் ரோஜாப் பூக்கள் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.அரிசிப் பையை குறுக்குவாக்கில் சின்னச்சின்னதாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வெட்டிய பகுதியினை கையில் பிடித்து ஒரு முனையை படத்தில் உள்ளது போல மடித்துக் கொள்ளவும்.
மடித்த முனையை பிடித்து ஒரு ஒரு இன்ச் நீல அளவிற்கான துணியை சுருட்டிக் கொண்டே வரவும்.
பிறகு, நன்றாக அழுத்திப் பிடித்துக் கொண்டு துணியை ஒரு முறுக்கு முறுக்கி பூவோடு சுற்றவும்.
ஒரு முறுக்கு - ஒரு சுற்று என்பதாக பூவின் முனை வரை சுற்றவும்.
முனையை பசை துப்பாக்கி கொண்டு பசை தடவி பூவின் அடியில் ஒட்டவும்.
பூவின் அடியில் தொங்கிக் கொண்டிருக்கும் அதிகப்படி துணியை வெட்டிவிடவும்.
இதே போல நிறைய பூக்களை செய்து கொள்ளுங்கள்.
முதல் பூ செய்யும்போது கொஞ்சம் சிரமம் போல தெரியும், 2-3 பூக்களை செய்து முடித்த பிறகு, இது மிக மிக எளிதாக தோன்றும். ஒரு நிமிடத்தில் 2 பூக்கள் செய்து விடலாம். துணியை முறுக்கி முறுக்கி சுற்றினால் முடிந்தது.
மலர் அலங்காரம்:
பூக்கள் தேவையான அளவு செய்த முடித்த பிறகு ஒரு பாக்ஸ் அட்டையை எடுத்து அதை "ரிங்" போல வெட்டவும்.
அதில் பூக்களை ஒவ்வொன்றாக பசை துப்பாக்கி கொண்டு ஒட்டவும்.
கொஞ்சம் இரண்டு ஓரங்களிலும் இடம் விட்டு பூக்களை ஒட்டவும்,
அப்போதுதான் ஓரங்களில் கற்களை ஓட்டமுடியும்.
பூக்களை முழுவதுமாக ஒட்டி முடித்தும், இரண்டு ஓரகளிலும் கற்கள் ஒட்டவும்.
நான் பச்சை மற்றும் சிகப்பு நிற ரெசின் கற்களை ஒட்டி உள்ளேன்.
உங்களுக்கு இந்த கற்கள் கிடைக்கவில்லை என்றால் பெரிய சைஸ் மணிகள் அல்லது சிறு கற்கள் அல்லது கூலங்கற்களில் நெயில் பாலிஸ் அடித்து ஓட்டலாம்.
பசை காய்ந்து கற்கள் நன்றாக ஒட்டிய பிறகு, சுவற்றில் ஆணி கொண்டு மாட்டிவிடலாம்.
இந்த கைவினை செய்வதற்கு சுலபம், பார்க்கவும் அழகாக இருக்கும்.
நீங்களும் இதை செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை பகிருங்கள். நன்றி!
No comments:
Post a Comment