Best out of waste materials!

This blog is to show the "how-to-make" tutorial of beautiful and useful crafts from trash materials like milk can, oil can, waste bottles, waste thermocols, cardboards, dry sticks, dry leaves, groundnut shells, tissue holder etc...

My ENGLISH craft blog: http://saranyajo.blogspot.com/ - Creative DIY crafts

My YOUTUBE channel: https://www.youtube.com/user/saranyascrafts - saranyascrafts

My FACEBOOK page: https://www.facebook.com/saranyajocrafts - Creative DIY crafts

My TAMIL story blog: http://saranyajotamil2.blogspot.com/ - ஆட்டுக்குட்டி


Wednesday, November 20, 2013

எளிதான தண்ணீர் பாட்டில் பூ ஜாடி (water bottle flower vase)!

தேவையான பொருட்கள்

 
காலி தண்ணீர் பாட்டில்கள்
சிறு குச்சிகள்
வண்ணம் (paint)
பசை துப்பாக்கி (glue gun or glue)
ஒரு காலி பிளாஸ்டிக் பாட்டில்
பட்ஸ் (earwax cotton buds)

 

 

 

செய்முறை

1) முதலில் தண்ணீர் பாட்டிலை படத்தில் காட்டுவது போல் இரண்டாக வெட்டவும்.
















2) பாட்டிலின் மேல் பகுதியை பூ வடிவில் வெட்டி, அதன் இதழ்களை மடக்கி விடவும்.


3) பிறகு பிடித்த வண்ணம் தீட்டிக்கொள்ளவும்.


4) மூடியின் நடுவில் சிறு துலையிட்டு ஒரு குச்சியினை செருகி அதனை ஆடாமல் ஒட்டிக்கொள்ளவும். அதன் மேல் பகுதியில் பட்சை இரண்டாக மடித்து ஒட்டவும்.
 
 
 
5) பாட்டிலின் மீதி உள்ள பகுதியை, சற்று பெரிய இலை வடிவில் வெட்டி பச்சை வண்ணம் தீட்டவும். இலைகளை குச்சியில் இடைவெளி விட்டு ஒட்டிக்கொள்ளவும்.
 
 
6) இது போல இன்னும் நான்கைந்து பூக்கள் செய்து வண்ணம் தீட்டி காய விடவும். ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை அழகாக டிசைன் அல்லது வண்ணங்கள் தீட்டி அதற்குள் கொஞ்சம் மணல் அல்லது களிமண் நிரப்பவும். பிறகு அதில் பூக்களை செருகவும்.
 
 
இப்பொழுது அழகான மிக எளிதான பூ ஜாடி தயார். இந்த பூ ஜாடி பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். உங்கள் வீட்டின் அழகை நிச்சியமாக அதிகரிக்கச் செய்யும்.
 
 
இதனை செய்து பாருங்கள், வீட்டினை அழகாக மாற்றுங்கள் வெறும் தேவை இல்லாத பாட்டில்களைக்கொண்டு.
 
மீண்டும் அடுத்த ப்ளாகில் சந்திப்போம்! உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்!
 
                                             நன்றி!
 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...