அரிசித் துணிப் பையில் எப்படி விதவிதமாக பூ அலங்காரம், மணி அலங்காரம், மணி மாலை, செய்ய முடியுமோ, அது போல அரிசி சாக்கு பை கொண்டும் வித்தியாசமான அலங்காரங்கள் செய்யலாம். நான் சாக்கு பையை மெல்லிய நீளத் துண்டுகளாக வெட்டி, பூக்கள் மற்றும் பூஜாடி அலங்காரம் செய்ய முயற்சித்துள்ளேன். நான் எவ்வாறு செய்துள்ளேன் என்ற செய்முறையை இங்கே கொடுத்திருக்கிறேன். இதன்செய்முறையை வீடியோவாக பார்க்க இங்கே சொடுக்கவும்.
* கண்ணாடி பாட்டில் (நான் BRU பாட்டில் உபயோகப்படுத்தி உள்ளேன்
* சாக்குப் பை
* பசைத் துப்பாக்கி (hot glue gun)
* பெயிண்ட்ஸ் (acrylic paints)
* அலங்கரிக்க: அலுமினியம் பாயில் (aluminium foil - பிரியாணி ஹோட்டல் பார்சல் மீது மூடி இருக்குமே அது), மணிகள்
* கத்தரிக்கோல்
சாக்கு பையினை நீல நீலத் துண்டுகளாக (அகலம் கம்மியாக) வெட்டி வைக்கவும்.
ஒவ்வொரு துண்டையும் கீழிருந்து மேலாக சுற்றிக் கொண்டே பசைத் துப்பாக்கி கொண்டு ஒட்டவும்.
சாக்குப் பை பூக்கள் செய்வதற்கு கீழே கொடுக்கப் பட்டுள்ள படங்களை பார்க்கவும்.
சாக்குத் துண்டின் ஒரு முனையை வளைத்துப் பிடித்துக் கொண்டு சுற்றி, பின்பு ஒரு திருப்பு, ஒரு சுற்று, என்று தளவு முனை வரும் வரை செய்யவும்.
முனையை பசைக் கொண்டு ஒட்டி விடவும்.
சாக்குப் பூக்களை உங்களுக்கு வேண்டிய வடிவில் ஒட்டி, கலர் செய்யவும்.
அலுமினியம் பாயில் கொண்டு அழகான உருண்டை மணிகள் செய்யலாம். அதன் செய்முறை கீழே உள்ள படங்களில்...
பாயிலை நீலத் துண்டுகளாக கத்தரித்து, அப்படியே உருட்டி, மெல்லிய குச்சி போல கொண்டு வரவும். ஒருத் முனையை ஒரு குச்சியில் சுற்றி, பிசிறாமல், உருண்டை வடிவில் சுற்றி, கடைசி முனையை ஒட்டிவிடவும்.
பாயில் மணிகளையும், வேறு கலர் மணிகளையும் கலந்து இடைவெளி விட்டு ஒட்டவும்.
இப்போது பாட்டிலின் உள்ளே, clay அல்லது மணல் நிரப்பி அதில் பூக்களை செருகி வைத்தால், அழகான பூ ஜாடி ரெடி!
தேவையான பொருட்கள்:
* சாக்குப் பை
* பசைத் துப்பாக்கி (hot glue gun)
* பெயிண்ட்ஸ் (acrylic paints)
* அலங்கரிக்க: அலுமினியம் பாயில் (aluminium foil - பிரியாணி ஹோட்டல் பார்சல் மீது மூடி இருக்குமே அது), மணிகள்
* கத்தரிக்கோல்
செய்முறை:
கண்ணாடி பாட்டிலின் மூடியை எடுத்துவிடவும்.சாக்கு பையினை நீல நீலத் துண்டுகளாக (அகலம் கம்மியாக) வெட்டி வைக்கவும்.