பொதுவாக நிலக்கடலைத் தோலை நாம் உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு குப்பையில் போட்டுவிடுவோம். அனால் இதைக் கொண்டு பல உபயோகமான அழகான கைவினைப் பொருட்களைச் செய்யலாம். அதில் ஒன்றாக, நிலக்கடலைத் தோலில் செய்த பூஜாடியின் செய்முறையை இங்கே கொடுத்திருக்கிறேன். நீங்களும் இந்த craft -னை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள "COMMENT" பகுதியில் குறிப்பிடுங்கள்.
நிலக்கடலைத் தோல் (கடலைக்காயின் மேல் இருக்கும் ஓடு)
பெயிண்ட் (Paint)
க்ளிட்டேர் (Glitter)
பார்பெகு ஸ்டிக்ஸ் (அல்லது காய்ந்த குச்சிகள்)
பசை (Glue)
இது மிக மிக எளிதான ஒரு கிராப்ட் ஆகும். முதலில் குச்சியின் கூர் முனையில் நிலக்கடலைத் தோல் ஒன்றொன்றாக பூப்போல சுற்றி பசை துப்பாக்கி கொண்டு ஒட்டவும்.
நான்கைந்து அடுக்கு வந்த பிறகு (அடுக்கு பூ வடிவில்) நல்ல நிறத்தில் ஓட்டின் நிறம் தெரியாதது போல் பெயிண்ட் செய்யவும்.
பெயிண்ட் காய்ந்தவுடன் ஓட்டின் மேல் பசை தடவி க்ளிட்டேர் தூவவும்.
தன்டிற்கு பச்சை நிறம் பூசி, ஒற்றை கொட்டை கொண்ட சின்னச்சின்ன தோலை இலை போல ஒட்டி வண்ணம் கொடுக்கவும்.
இது போல இன்னும் சில பூக்கள் செய்து ஒரு பாட்டில் அல்லது திசு பேப்பர் ஹோல்டரை அலங்கரித்து அதில் கொஞ்சம் மண் நிரப்பி பூக்களை அதில் செருகவும்.
இப்பொழுது அழகான பூக்குவளை தயார்.
இந்த செய்முறையை video-வாக பார்க்க வேண்டுமானால், இந்த URL http://youtu.be/EFOg4qdtB2g -லைப் கிளிக் செய்யுங்கள்.
நன்றி...!!!
தேவையான பொருட்கள்
நிலக்கடலைத் தோல் (கடலைக்காயின் மேல் இருக்கும் ஓடு)
பெயிண்ட் (Paint)
க்ளிட்டேர் (Glitter)
பார்பெகு ஸ்டிக்ஸ் (அல்லது காய்ந்த குச்சிகள்)
பசை (Glue)
செய்முறை
இது மிக மிக எளிதான ஒரு கிராப்ட் ஆகும். முதலில் குச்சியின் கூர் முனையில் நிலக்கடலைத் தோல் ஒன்றொன்றாக பூப்போல சுற்றி பசை துப்பாக்கி கொண்டு ஒட்டவும்.
நான்கைந்து அடுக்கு வந்த பிறகு (அடுக்கு பூ வடிவில்) நல்ல நிறத்தில் ஓட்டின் நிறம் தெரியாதது போல் பெயிண்ட் செய்யவும்.
பெயிண்ட் காய்ந்தவுடன் ஓட்டின் மேல் பசை தடவி க்ளிட்டேர் தூவவும்.
தன்டிற்கு பச்சை நிறம் பூசி, ஒற்றை கொட்டை கொண்ட சின்னச்சின்ன தோலை இலை போல ஒட்டி வண்ணம் கொடுக்கவும்.
இது போல இன்னும் சில பூக்கள் செய்து ஒரு பாட்டில் அல்லது திசு பேப்பர் ஹோல்டரை அலங்கரித்து அதில் கொஞ்சம் மண் நிரப்பி பூக்களை அதில் செருகவும்.
இப்பொழுது அழகான பூக்குவளை தயார்.
இந்த செய்முறையை video-வாக பார்க்க வேண்டுமானால், இந்த URL http://youtu.be/EFOg4qdtB2g -லைப் கிளிக் செய்யுங்கள்.
நன்றி...!!!
No comments:
Post a Comment