இந்தப் பூக்குவளை பார்க்க மிக அழகாக இருக்கும், நிச்சயம் இது உங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்.
இதன் செய்முறையை வீடியோவாகப் பார்க்க: இந்த லிங்க்: https://www.youtube.com/watch?v=V0kUyDZWxHEகைச் சொடுக்கவும். எனது Facebook பக்கம்: https://www.facebook.com/saranyajocrafts.
இதன் செய்முறையை வீடியோவாகப் பார்க்க: இந்த லிங்க்: https://www.youtube.com/watch?v=V0kUyDZWxHEகைச் சொடுக்கவும். எனது Facebook பக்கம்: https://www.facebook.com/saranyajocrafts.
பிளாஸ்டிக் கேன், கத்தரிக்கோல், அக்ரிலிக் பெயிண்ட்ஸ் அல்லது நெயில் பாலிஷ் கலர்ஸ், காய்ந்த மெல்லிய குச்சிகள், டீத்தூள், இன்ஸ்டன்ட் க்ளு, சாதாரண பசை, பேப்பர் கப், பிசைந்த மாவு (கப்பின் உள்ளே அடைக்க).
செய்முறை:
மூன்று மூடிகள் சிறியதும் பெரியதுமாக எடுத்துக் கொள்ளுங்கள். பிளாஸ்டிக் கேன் மேல் மூடியை வைத்து, ரவுண்டு போட்டுக் கொள்ளுங்கள். நமக்கு நிறையப் பூக்கள் தேவை என்பதால் நிறைய ரவுண்டுகள் வரைந்து, அவற்றை தனியே கத்தரித்துக் கொள்ளுங்கள்.
இதழ்கள் ஒரே மாதிரி இருக்க, படத்தில் உள்ளது போல outline கோடுகள் போட்டு, அதன் மேல் கத்தரிக்கோல் கொண்டு கத்தரியுங்கள்.
இப்போது, ஒவ்வொரு இதழையும் பின் பக்கமாக மடக்குங்கள். இதழ்கள் மடங்கி விரிந்து பார்க்க அழகாக இருக்கும்.
கேனின் மீதமுள்ள பகுதியை நீளவாக்கில் வெட்டி எடுத்து, அதில் இலைகள் படத்தில் உள்ளது போல வரைந்து, வெட்டிக் கொள்ளுங்கள்,
ஒவ்வொரு பூவாக குச்சியின் நுனியில் செருகி (பூவின் வெளியே நீட்டி கொண்டிருக்கக் கூடாது), இன்ஸ்டன்ட் பசை கொண்டு ஒட்டிவிடுங்கள்.
பார்க்க மிக அழகாக இருக்கும் இந்த பூக்குவளை. நன்றி...!