தேவையான பொருட்கள்:
கார்ட்போர்ட் அட்டை
கத்தரிக்கோல்
பசை துப்பாக்கி
மணிகள் (விருப்பபட்டால்)
செய்முறை:
முதலில் அட்டையை படத்தில் உள்ளது போல "heartin" வடிவில் வெட்டவும்.டிஷு பேப்பரை மடித்து சதுர வடிவில் தேவையான அளவிற்கு வெட்டி வைக்கவும்.
வெட்டி வைத்துள்ள பேப்பரில் ஒரு சின்ன கட்டாக கையில் எடுத்து அதை அப்படியே சமமாக மடிக்கவும்.
மடித்ததை ஒரு கையில் பிடித்துக் கொண்டு கத்தரிக்கோலால் படத்தில் உள்ளது போல வெட்டவும்.
இப்பொழுது மடித்த பகுதியை விரிக்கவும்.
ஒவ்வொரு பேப்பராக விரித்து உருட்டி மடிக்கவும்.
அதன் இரு பக்கத்தையும் பிடித்து நடு பகுதியை திரிக்கவும்.
இது போல நிறைய கலர்களில் உங்களுக்கு தேவைபடுகிற அளவிற்கு செய்து வைக்கவும்.
Heartin அட்டையை எடுத்து அதன் முழுவதற்கும் சுற்றி வாய்த்த டிஷு பேப்பரை இரண்டாக மடித்து ஒவ்வொன்றாக அடர்த்தியாக ஓட்ட வேண்டும்.
ஓட்டுவதற்கு பசை துப்பாக்கி அல்லது instant gum உபயோகிக்கவும்.
நல்ல அடம்பாக ஓட்டினால் பார்க்க அழகாக இருக்கும். நீங்கள் விரும்பிய டிசைன் செய்து அசத்துங்கள்.
முழுவதுமாக ஒட்டியபின் பார்பதற்கு அழகாக இருக்கும்.
இப்படியே சுவற்றில் மாட்டலாம் அல்லது மணிகள் கொண்டு அலங்கரித்தும் மாட்டலாம்.
இது மிக எளிமையாக செய்யகூடிய அருமையான ஒரு கைவினையாகும்.