Best out of waste materials!

This blog is to show the "how-to-make" tutorial of beautiful and useful crafts from trash materials like milk can, oil can, waste bottles, waste thermocols, cardboards, dry sticks, dry leaves, groundnut shells, tissue holder etc...

My ENGLISH craft blog: http://saranyajo.blogspot.com/ - Creative DIY crafts

My YOUTUBE channel: https://www.youtube.com/user/saranyascrafts - saranyascrafts

My FACEBOOK page: https://www.facebook.com/saranyajocrafts - Creative DIY crafts

My TAMIL story blog: http://saranyajotamil2.blogspot.com/ - ஆட்டுக்குட்டி


Friday, March 27, 2015

பிளாஸ்டிக் பாட்டில் கொண்டு செய்த மலர் அலங்காரம்

இது மிகவும் சுலபமான ஒன்றுதான். பூக்களுக்கு பெரிதாக நுணுக்கு வேலைப்பாடுகள் எதுவும் இல்லை என்றாலும், மொத்தமாக பார்க்க, மிக அழகாக இருக்கும்.
இதன் செய்முறையை வீடியோவாகப் பார்க்க, இங்கே சொடுக்கவும்.

தேவையான பொருட்கள்:

பிளாஸ்டிக் கூல் ட்ரின்க் பாட்டில்
கத்தரிக்கோல், மார்க்கர் 
நைல் போலிஷ், பச்சை பெயிண்ட் 
பசை, பசைத் துப்பாக்கி 
வயர் 
பச்சை நிற பேப்பர் 

செய்முறை:

பாட்டிலை அடிப் பகுதியையும் மூடிப் பகுதியையும் வெட்டிவிட்டு, மேதி இருக்கும் பாட்டிலை நேராக வெட்டிவிட்டு, பேப்பர் போல நேராக அழுத்தி பிடித்து, அதில், மூடி வைத்து, ரவுண்டுகள் போடவும். 

அவற்றை வெட்டி தனியே வைக்கவும்.
நைல் போலிஷ் கலர், படத்தில் இருப்பது போல தீட்டவும்.

நைல் போலிஷ் காய்ந்ததும் சுற்றி சின்னசின்னதாக வெட்டவும்.
நடுவிற்கு பசை தடவி, மஞ்சள் பொடி இடவும்.
இது போல நிறைய பூக்கள் செய்து வைக்கவும்.
கம்பியை அரையடி நீளத்திற்கு வெட்டி, பச்சை பேப்பர் சுற்றவும்.
இலைகள் செய்வதற்கு படத்தில் உள்ளது போல நீளநீளமாக வெட்டி, பச்சை நிறம் தீட்டவும்.
இலைகளையும் பூக்களையும் இடைவெளி விட்டு பசைத் துப்பாக்கி கொண்டு ஒட்டவும்.

இதுபோல நான்கைந்து கொத்துகள் செய்து, BRU பாட்டில் மூடியில் பசைத் துப்பாக்கி கொண்டு ஒட்டவும்.



அவ்ளோதான் வேலை, இந்த அலங்காரம் பார்க்க வெகு அழகாக இருக்கும். 
செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை இங்கே குறிப்பிடுங்கள். நன்றி !

பிளாஸ்டிக் கேன் கொண்டு செய்த மயில் சுவர் அலங்காரம்

நான் இது வரை செய்த கைவினைகளில் எனக்கு மிகவும் பிடித்தது. மிக அழகாக வந்துள்ளது.
அதன் செய்முறையை VIDEO வாக பார்க்க விரும்பினால், இங்கே சொடுக்குங்கள்.

தேவையான பொருட்கள்:

 வெள்ளை கேன்
கத்தரிக்கோல்/மார்கர்
க்ளிட்டேர்ஸ்
நைல் பாலிஸ் - பிங்க்
பசைத் துப்பாக்கி/க்லு

செய்முறை 

முதிலில், மயிலின் தலைப் பகுதியை வரைந்து, அதனை தனியாக வெட்டி வைக்கவும்.

மயிலின் இறகு செய்வதற்கு, நீல நீளமாக கானின் பகுதிகளை வெட்டி எடுக்கவும்.
அதில் படத்தில் உள்ளது போல மெலிது மெலிதாக ஓரத்தில் ஆரம்பித்து, நடுவரை கத்தரித்துக் கொள்ளுங்கள்.



மயிலின் உடம்புப் பகுதியையும், இரண்டு ஓரங்களையும் மெல்லியாதாக நறுக்குங்கள்.
தலை, கழுத்து, உடல், ரெக்கை என, எல்லாவற்றிற்கும், பசை தடவி, ஏற்ற மாதிரி நிறங்களில், க்ளிட்டேர்ஸ் தூவி காயவிடுங்கள்.
எல்லாவற்றையும் சேர்த்து ஒட்டுங்கள் பசை துப்பாக்கி கொண்டு.
இறகுகளை அலங்கரிக்க, சிறிய பூக்கள் செய்து, ஆங்காங்கே ஒட்டுங்கள்.

இது போல, இரண்டு மயில்கள் செய்துள்ளேன், எதிர் எதிரே பார்ப்பது போல.
கேக் tray அல்லது அட்டையை ரௌண்டாக வெட்டி, மேலே பேப்பர் ஒட்டி,  இரண்டு மயில்களையும் உங்கள் கற்பனை போல ஒட்டி, சுவற்றில் ஆணி அல்லது டபுள் டேப் கொண்டு ஒட்டுங்கள்.



மிக அழகாக, மின்னும் மயில்கள் நிச்சயம் கண்ணைப் பறிக்கும்.

Monday, March 23, 2015

போம் க்ளோத் மலர் மாலை

இந்த மலர் மாலையை நூல் கொண்டு கோர்க்கத் தேவையில்லை, ஒரு மொத்த லேசில் (lace) ஓட்டினால் போதும், மிக அழகாக இருக்கும். செய்முறை இங்கே வீடியோவாக.

தேவையான பொருட்கள்:

போம் க்ளோத் (foam cloth - இது இங்கே (USA-ல் மிக) குறைவான விலையில் கிடைக்கிறது, நம்மூர் கடைகளில் கிடைக்கிறதா என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை, ஆன்லைனில் வாங்கிக்கொள்ளலாம் அல்லது polyster துணிகளை இதற்கு பதிலாக உபயோகித்துக் கொள்ளலாம்.
நீளமான லேஸ் (நான் பழைய designer துணிகளில் இருந்த லேஸ்களை கத்தரித்து வைத்திருந்தேன், அதைத்தான் இதற்கு பயன்படுத்தி இருக்கிறேன்.
கத்தரிக்கோல்/மார்கர்
மணிகள்/ கற்கள்
பசைத் துப்பாக்கி

செய்முறை 

படத்தில் உள்ளது போல பூக்கள் வரைந்து கத்தரித்து வைத்துக் கொள்ளவும்.


பூக்களின் நடுவிற்கு கற்கள் அல்லது மணிகள் ஒட்டவும்.
பச்சைத் துணியில் சின்னச்சின்ன இலைகள் வெட்டி வைக்கவும்.
பூக்களை ஒவ்வொன்றாக லேசில் ஒட்டவும் பசைத் துப்பாக்கி கொண்டு.
ஆங்காங்கே இலைகள் ஒட்டவும்.

இது மிகவும் எளிதான முறையில் செய்யக்கூடிய மலர் மாலை.


 நான் சாமிப் படத்தை நடிவில் வைத்து, சுற்றி விளக்கு போல மாலையை தொங்க விட்டிருக்கிறேன்.


Related Posts Plugin for WordPress, Blogger...