Best out of waste materials!

This blog is to show the "how-to-make" tutorial of beautiful and useful crafts from trash materials like milk can, oil can, waste bottles, waste thermocols, cardboards, dry sticks, dry leaves, groundnut shells, tissue holder etc...

My ENGLISH craft blog: http://saranyajo.blogspot.com/ - Creative DIY crafts

My YOUTUBE channel: https://www.youtube.com/user/saranyascrafts - saranyascrafts

My FACEBOOK page: https://www.facebook.com/saranyajocrafts - Creative DIY crafts

My TAMIL story blog: http://saranyajotamil2.blogspot.com/ - ஆட்டுக்குட்டி


Saturday, February 28, 2015

பிளாஸ்டிக் கானில் செய்த லில்லி மலர்கள்


தேவையான பொருட்கள்

பிளாஸ்டிக் கேன் (வெள்ளை)
கத்தரிக்கோல்
பசைத் துப்பாக்கி
பெயிண்ட்ஸ்
பேப்பர்
ப்லோரல் டேப் (green floral tape)

செய்முறை

கானில் இதழ்கள் வரைந்து வெட்டிக்கொள்ளவும்.

பேப்பரை உருட்டி குச்சி போல செய்யுங்கள்.

பூவின் நடு மகரந்த தண்டுகள், படத்தில் உள்ளது போல வெட்டிக்கொள்ளுங்கள்.

பேப்பர் தண்டின் ஒரு தளவில், மகரந்த குச்சிகளை (stamen - அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை) ஒன்றாக சேர்த்து, பசைத்துப்பாக்கி கொண்டு ஒட்டவும்.
பிறகு, இதழ்களை ஒட்டுங்கள்.


பேப்பர் தன்டிற்கு ப்லோரல் டேப் சுற்றவும்.

கேனை நீளமாக வெட்டி, நீளமான இலைகள் வரைந்து, வெட்டி எடுத்து, நடுவில் கோடு போல மடித்துவிட்டு, மறுபடியும் நேராக எடுத்துவிட்டு வைக்கவும்.

பூக்களுக்கும் இலைகளுக்கும் வண்ணம் கொடுங்கள்.


4-5 பூக்கள் செய்து, தண்டுகளை ஒன்றாக சேர்த்து கட்டி அதன் மேல் ப்லோரல் டேப் சுற்றி, அதன் மேல் இலைகள் நெருக்கமாக ஒட்டி அதன் மேல் டேப் சுற்றவும்.

ஒரு பேப்பர் கப் எடுத்து அதில் கோதுமை மாவு கெட்டியாக பிசைந்து அதில் நிரப்பி, இந்த தண்டை செருகவும்.
அதை வெயிலில் கொஞ்ச நேரம் வைத்தால் மாவு காய்ந்து தன்டு நன்றாக பிடித்துக் கொள்ளும்.

இந்தப் பூக்கள் பார்க்க அழகாக இருக்கும். நன்றி  !

Friday, February 27, 2015

பிளாஸ்டிக் கேன் உபயோகித்து செய்த விளக்கு அலங்காரம்



தேவையான பொருட்கள் 

பிளாஸ்டிக் கேன் (பெரியதான)
நைல் போலிஷ் (2-3 விதமான கலர்களில்)
க்ளிட்டேர்ஸ் (glitters)
சாதாரண க்ளு (glue)
பசைத் துப்பாக்கி (glue gun)
சிறிய மூடி

செய்முறை 

ஒரு பெரிய மூடியைக் கொண்டு கானின் மெது வட்டம் வரையவும். அதை வெட்டிக்கொள்ளவும்.

படத்தில் உள்ளது போல பூ வரைந்து, வெட்டிக்கொள்ளவும்.

சிறிய இதழ்களையும் வரைந்து, வெட்டிக்கொள்ளவும்.


பெரிய இதழ்களை உள்பக்கமாக மடக்கவும். தளவினில் உருட்டி மடக்கினால் பார்க்க நன்றாக இருக்கும்.
இப்போது நைல் போலிஷ் கலர் கொடுக்கவும்.



வேண்டுமானால் க்ளிட்டேர்ஸ் கொண்டு அலங்கரிக்கலாம்.
அடியில் மூடியை ஒட்டிவிடுங்கள்.
நடுவிற்கு கலர் செய்த வட்ட candle அல்லது விளக்கு வைத்து தீபம் ஏற்றினால் பார்க்க அவ்வளோ அழகாக இருக்கும்.



மிக எளிதாக செய்ய முடியும். அதே போல தாமரை போல அழகாக இருக்கும், இந்த அலங்காரம். செய்து பாருங்கள், நல்லதொரு பொழுது போக்கு. அழகான விளக்கு அலங்காரம்!!!
Related Posts Plugin for WordPress, Blogger...