Best out of waste materials!

This blog is to show the "how-to-make" tutorial of beautiful and useful crafts from trash materials like milk can, oil can, waste bottles, waste thermocols, cardboards, dry sticks, dry leaves, groundnut shells, tissue holder etc...

My ENGLISH craft blog: http://saranyajo.blogspot.com/ - Creative DIY crafts

My YOUTUBE channel: https://www.youtube.com/user/saranyascrafts - saranyascrafts

My FACEBOOK page: https://www.facebook.com/saranyajocrafts - Creative DIY crafts

My TAMIL story blog: http://saranyajotamil2.blogspot.com/ - ஆட்டுக்குட்டி


Friday, January 17, 2014

அட்டையில் செய்த காதணி மாட்டி (Earring holder made with cardboard, woolen thread, and stocking net)!

தேவையான பொருட்கள்

பிஸ்ஸா கவர் அல்லது வேறு கார்ட்போர்ட் அட்டை
பழங்களை நிரப்பும் ஸ்டாக்கிங் நெட் (நரம்பு அல்லது துணியால் ஆனது)
உள்ளன் நூல் கண்டு
பசை/பசை துப்பாக்கி
கத்தரிக்கோல்
ஜம்கி (confetti)

செய்முறை

முதலில் பிஸ்ஸா கவரின் இரண்டு அட்டைகளிலும் இரண்டு வட்டங்கள் போடவும்.
இரு வட்டங்களின் நடுவில் இருக்கும் பகுதிதான் நமக்குத் தேவை. இரண்டு அட்டையிலும் அவற்றை வெட்டி எடுக்கவும்.
இப்பொழுது வெட்டிய அட்டை பார்க்க "ரிங்" போல இருக்கும்.
முதல் அட்டை ரிங்கின் மேலே ஸ்டாக்கிங் நெட்டை முழுவதுமாக ஒட்டி, வெளியே தெரியும் பகுதிகளை நீக்கிவிடவும்.
இரண்டாவது அட்டையை இப்பொழுது முதல் அட்டையின் மேல் ஒட்டவும், நெட் துணி ஒட்டிய பக்கம் நடுவில் வரும்படியாக ஒட்டவும்.
இப்பொழுது, ஒரு சின்னக் கம்பியை மடித்து, அதன் உள்ளே உள்ளன் நூலை நுழைத்து, மறு நுனியை அட்டையின் ஒரு பகுதியில் ஒட்டி, நூலை ரிங் அட்டை முழுவதுமாக சுற்றவும்.
அலங்காரத்திற்காக கற்கள், மணிகள் அல்லது ஜம்கியை நம் விருப்பம் போல நூல் சுற்றிய பகுதியில் ஓட்டலாம்.
கடைசியாக புஷ் பின் கொண்டு சுவற்றில் மாட்டிவிடவும். உங்கள் தொங்கு காதணிகளை நடு பகுதியில் இருக்கும் நெட்டின் மீது மாட்டி தொங்க விடுங்கள்.
மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய அழகான, உபயோகமான craft தயார்.
 
நீங்களும் இந்த எளிய craft-னை செய்து பாருங்கள். நன்றி...!!!

 

Saturday, January 11, 2014

டீத்தூள், உப்புத்தூள் மற்றும் கோலப் பொடி கொண்டு செய்த "WELCOME" அட்டை சுவர் அலங்காரம் (Welcome craft with tea powder, salt and rangoli powder)!

என் கணவர் ஒரு தடவை புதிதாக வாங்கி வந்த டீத்தூள் மிகக் கசப்பாக இருந்தது. டீக்காக அதை பயன்படுத்த முடியவில்லை. அந்தத்தூளை என்ன செய்யலாம் என்று யோசிக்கையில், அதை வைத்து crafts செய்யலாம் என்று தோன்றியது. அதன் ஒரு முயற்சிதான் இந்த "welcome board craft". இதை (செய்து) பார்த்துவிட்டு, எப்படி இருக்கிறது என்று உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.        

தேவையான பொருட்கள் 

கார்ட்போர்ட் அட்டை (கடையில் வாங்கியது or பார்சல் பாக்ஸ் அட்டை)
பிளாஸ்டிக் கேன் (எடுத்துக்காட்டு: பால் டப்பா - empty milk jug)
டீத்தூள்
உப்புத்தூள்
கோலப் பொடி (ஏதேனும் ஒரு கலர் பொடி கலந்தது)
கத்தரிக்கோல்
பைப் க்லினெர் (pipe cleaner or cure pipes - craft கடைகளில் கிடைக்கும்)
க்ளிட்டேர் (glitter)
ஜம்கி (confetti)
பசை, பசை துப்பாக்கி

செய்முறை 

முதலில் அட்டையின் ஒரு பக்கம் முழுவதும் வெள்ளை பெயிண்ட் 2-3 தடவை (coating) கொடுக்கவும்.
பிளாஸ்டிக் கானில் 2.5 inches மற்றும் 1.5 inches என்று இரண்டு அளவுகளில் நிறைய வட்டம் போட்டு, தனித்தனியாக வெட்டி வைக்கவும்.
வெட்டிவைத்துள்ள வட்டங்களில் பூ இதழ்கள் வரைந்து, அதற்குத் தகுந்தார் போல வெட்டிக்கொள்ளவும்.
பெரிய பூவின் நடுவில் சிறிய பூவை ஒட்டி, பூவின் நடுவில் ஒரு ஜம்கியை ஒட்டவும். இது போல நிறைய பூக்கள் செய்து வைக்கவும்.
அட்டையில் பெயிண்ட் நன்றாக காய்ந்த பிறகு, ஓரங்களையொட்டி 1 inch வித்யாசத்தில் இரண்டு செவ்வக கோடுகள் போடவும். கோடுகளின் மேல் முழு நீளத்திற்கும் கோல்டன் வயர் போல இருக்கும் பைப் க்லினெரை ஒட்டவும்.

இப்பொழுது மூன்று பகுதிகளாக இருக்கும். நடு பகுதியில் "welcome" எழுத வேண்டும். அதற்கு, நடு பகுதி முழுவதும் பசை தடவி அதன் மேல் அடர்த்தியாக டீத்தூள் தூவவும்.
பசை காயுமுன் நடுவில் விரலைக் கொண்டு "WELCOME" என்று அழுத்தி எழுதவும். இப்பொழுது அந்த எழுத்துக்களின் மேல் இருக்கும் டீத்தூள் பெயர்ந்து, எழுத்துக்கள் வெள்ளையாகத் தெரியும்.
எழுத்துக்களின் மேல் பசை தடவி உப்புத்தூள் மற்றும் glitter கலந்த கலவையைத் தூவவும். பசை காய்ந்து டீத்தூள் நன்றாக அட்டையில் ஒட்டிக்கொண்டதும் அதன் மேல் அலங்காரத்திற்காக கற்கள் ஒட்டவும்.
அடுத்ததாக, இரண்டு செவ்வகத்திற்கு நடுவே இருக்கும் பகுதியில், பசை தடவி, அதன் மேல் கலர் கோலப்பொடியில் க்ளிட்டேர் கலந்து தூவவும்.
அட்டையின் ஓரப்பகுதியில் செய்து வைத்துள்ள பிளாஸ்டிக் பூக்களை வரிசையாக ஒட்டவும்.
பசை நன்றாக காய்ந்ததும், வீட்டின் முன் கதவின் மேலே சுவற்றில் "double tape" கொண்டு ஒட்டிவிடவும்.
 
இது சுலபமாக வேட்டிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு செய்த ஒரு craft ஆகும். 
நீங்களும் இதை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.
                                                         நன்றி...!!!     
 

Tuesday, January 7, 2014

காலேண்டர் பேப்பர் மற்றும் அட்டை கொண்டு செய்த கடலைத்தொல் பூ அலங்காரம் (Calendar paper floral wall craft with groundnut shells, pista shells and curry leaves sticks)!

தேவையான பொருட்கள் 

காலேண்டர் பேப்பர்
கார்ட்போர்ட் அட்டை
நிலக்கடலைத் தோல்
பிஸ்தா தோல்
கருவேப்பிலைக் குச்சிகள்
பெயிண்ட்
பசை துப்பாக்கி or பசை
கத்தரிக்கோல்

செய்முறை 

சென்ற ஆண்டு உபயோகித்த காலேண்டர் பேப்பர் ஒன்றை முழுதாக கிழித்துக் கொள்ள வேண்டும். பேப்பர் வெளிர் நிறமாக இருந்தால் நன்று. கார்ட்போர்ட் அட்டையை வேண்டிய வடிவத்தில் கத்தரித்து, அதன் மேல் காலேண்டர் பேப்பரை சுற்றி, அட்டையின் மறுபக்கமாக மடித்து ஒட்டிவிடவும்.
பேப்பரின் மேல் கருப்பு வண்ணம் தீட்டவும். கருப்பு அல்லது வேறு அடர் நிறம் கொடுத்தால் பேப்பரில் உள்ள எழுத்துக்கள் தெரியாமல் இருக்கும்.
பெயிண்ட் காய்ந்ததும், கருவேப்பிலைக் குச்சிகலை ஒரு செடியின் தண்டு போல ஒட்டவும். அதில் பூக்கள் போல கடலைத் தோட்களையும், இலைகளுக்கு பிஸ்தா  அல்லது ஒரு கொட்டை உள்ள  கடலைத் தோட்களை ஒட்டவும்.
பூக்கள், இலைகள், தண்டுகளுக்கு வண்ணம் தீட்டவும்.
 
வேர் பகுதிக்கு கற்கள் ஒட்டவும்.
பெயிண்ட் நன்றாக காய்ந்ததும் "double tape" கொண்டு சுவற்றில் ஓட்டிவிடலாம். இது மிக மிக எளிதாக செய்யக்கூடிய ஒரு "craft" ஆகும். குழந்தைகளுக்கு ஏற்ற craft இது.
நீங்களும் இதனை செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். நன்றி.
 

Thursday, January 2, 2014

பேப்பர் ப்ளேட்டில் செய்த அழகிய தொங்கி (Paper plate hanging craft with beads and pumpkin seeds!)!

பயன்படுத்திய பொருட்கள்:

பெரிய பேப்பர் ப்ளேட்- 1 (Large paper plate - 1)
பிளாஸ்டிக் ஐஸ் கிரீம் கப் அல்லது சிறிய காகித ப்ளேட் - 1 (Plastic ice-cream cup or small paper plate)
தேவையில்லாத பிளாஸ்டிக் கேன் (Empty milk jug or any plastic can)

மணிகள் (Beads) 
கம்பளி நூல் கண்டு (Woolen thread bundle)

பூசணி விதைகள் (Pumpkin seeds)
பிளாஸ்டிக் ஸ்ட்ரா (Plastic straws)
பஞ்சிங் மெசின் (Punching machine)
கத்தரிக்கோல் (Scissor)

பசை அல்லது பசை துப்பாக்கி (Glue or Glue gun)

 செய்முறை விளக்கம்:

முதலில் பஞ்சிங் மெசின் கொண்டு காகித ப்ளேட் மற்றும் ஐஸ் கிரீம் கப்பின் ஓரங்களில் 1 or 2 inch இடைவேளை விட்டு துளைகள் போடவும்.
பிளாஸ்டிக் கேனில் பூ இதழ்கள் வரைந்து வெட்டி கொள்ளுங்கள். இதழ்களை பிளேட்களின் ஓரங்களில் ஒட்டுங்கள்.
பசை காய்ந்ததும் காகித ப்ளேட் மற்றும் ஐஸ் கிரீம் கப் முழுவதற்கும் உங்களுக்கு பிடித்தது போல கலர் செய்து காய விடுங்கள்.
தொங்கும் பூக்கள் இரண்டு வகையில் செய்யலாம், முதலில் மணி பூக்கள் செய்வதற்கு, ஒரு பெரிய உருண்டையான மணியை எடுத்து அதன் ஓரங்களைச் சுற்றி சற்று சிறிய மணிகளை பசை துப்பாக்கி கொண்டு ஒட்டவும்.
பூசணி விதைப் பூக்கள் செய்வதற்கு, ஒரு பெரிய உருண்டையான மணியை எடுத்து அதன் ஓரங்களைச் சுற்றி பூசணி விதைகள் பூ வடிவில் ஒட்டவும்.
பூக்கள் செய்த பிறகு வுல்லன் நூல் கொண்டு பூக்கள்,  ஸ்ட்ராஸ், மற்றும்  மணிகளை படத்தில் உள்ளது போல அல்லது உங்கள் விருப்பம் போல தனித்தனியே கோர்த்து வைக்கவும்.
பிளேட்ஸ் இரண்டையும் ஒட்டி, பெயிண்ட் நன்றாக காய்ந்த பிறகு, நூல் தொங்கிகளை ஒவ்வொரு ஓட்டைக்கும்  ஒவ்வொரு தொங்கியாக நுலைத்து பக்கத்து நூலோடு முடி போட்டு விடவும்.
தொங்கிகள் பார்க்க அழகாக தெரிய, பெரிய ப்ளேட்டில் கோர்த்த தொங்கிகளின் நீளம் சிறிய ப்ளேட் தொங்கிகள் மற்றும் நடு தொங்கியின் நீளத்தை விட குறைவாக இருக்க வேண்டும். சற்று தூரத்தில் இருந்து பார்க்க, தொங்கும் பூக்கள் "V" வடிவில் இருக்க வேண்டும்.

அவ்வளவுதான்... கடைசியாக மாட்டுவதற்கு வசதியாக நடுவில் தொங்கும் நூலினை பிளேடின் மேலே கொஞ்சம் நீளமாக விட்டு முடி போடுங்கள்.
இப்பொழுது ஹாலின் நடுவே  சுவற்றில் ஆணியில் மாட்டித் தொங்க விடுங்கள், பார்க்க அழகாக இருக்கும்.
எளிதாக செய்யக்கூடிய இந்த craft-னை நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
                                                            நன்றி...!!!
Related Posts Plugin for WordPress, Blogger...