Best out of waste materials!

This blog is to show the "how-to-make" tutorial of beautiful and useful crafts from trash materials like milk can, oil can, waste bottles, waste thermocols, cardboards, dry sticks, dry leaves, groundnut shells, tissue holder etc...

My ENGLISH craft blog: http://saranyajo.blogspot.com/ - Creative DIY crafts

My YOUTUBE channel: https://www.youtube.com/user/saranyascrafts - saranyascrafts

My FACEBOOK page: https://www.facebook.com/saranyajocrafts - Creative DIY crafts

My TAMIL story blog: http://saranyajotamil2.blogspot.com/ - ஆட்டுக்குட்டி


Wednesday, November 27, 2013

டிஷ்யு பேப்பர் ஹோல்டர் பூகுவளை (Tissue paper holder flower vase)!

டிஷ்யு பேப்பர் ஹோல்டர் கொண்டு செய்த அழகிய பூகுவளை

 

தேவையான பொருட்கள்:


 


டிஷ்யு பேப்பர் ஹோல்டர் (tissue paper holder)

கத்தரிகோல் (scissor)

பெயிண்ட்  (paint)

பசை (glue)

காய்ந்த குச்சிகள் (dry sticks)

செய்முறை


1) டிஷ்யு பேப்பர் ஹோல்டரை (இல்லையென்றால் வேறு எதாவது ஒரு மெல்லிய அட்டை)  முழு நீளமாக வெட்டி, அதில் சின்னச்சின்ன பூ இதழ்கள் வரைந்து அவற்றை கத்தரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.


2) ஒரு குச்சியினை எடுத்து அதன் சிறு முனையில் வெட்டி வைத்துள்ள இதழ்களை பூ வடிவில் ஒவ்வொன்றாக ஒட்டிக்கொள்ள வேண்டும்.


3) பூவின் நடுவில் ஒரு பட்டின்  (earwax bud) பாதி பகுதியை ஒட்டவும். பூவிற்கு பிடித்த நிறத்தில் வண்ணம் தீட்டவும். பூந்தண்டிற்கும் பச்சை நிறம் கொடுக்கவும்.


4) இது போல வேண்டிய பூக்களை செய்து, ஒரு சிறிய பிளாஸ்டிக் பாட்டிலின் நுனியை வெட்டிவிட்டு அதில் கொஞ்சம் மண் மற்றும் கலர் கற்கள் நிரப்பி, அதில் டிச்சு பூக்களை நட்டு வைக்கவும்.


இப்பொழுது ஒரு அழகான பூகுவளை தயார். இந்த டிஷ்யு பேப்பர் ஹோல்டர் பூக்களுக்கு சரியாக பெயிண்ட் கொடுத்தால் பார்க்க நிஜப்பூக்கள் போலவே தோன்றும்.


இந்தப்பூகுவலையை நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை எங்கலுக்கு எழுதுங்கள்.

                                                நன்றி!!!

 

Monday, November 25, 2013

பிளாஸ்டிக் கேன் மயில் சுவர் அலங்காரம் (Plastic can Peacock wall craft!)!

தேவையான பொருட்கள்



பிளாஸ்டிக் கேன் (plastic can)

கத்தரிக்கோல் (scissor)

பெயிண்ட் (paint)

அலங்காரக் கற்கள் (color stones)

க்ளிட்டேர் (glitter)

பசை துப்பாக்கி (glue gun)

செய்முறை 

1) முதலில் பிளாஸ்டிக் கேனின் மேல் படத்தில் காட்டியுள்ளதைப் போல மயில் வரைந்து (தொகையைத் தவிர) அதனைத் தனியாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் படத்தில் காட்டியுள்ளது போல நீதுளிகள் போல வரைந்து அவற்றியும் வெட்டி தனியாக வைத்துக்கொள்ளவும்.
 
 
2) வெட்டிய தொகைப் பகுதிகளை ஒவ்வொன்றாக சேர்த்து மயில் தொகை போல ஒட்டிக்கொள்ள வேண்டும்.
 
 
3) பின்னர் மயில் நிறத்துக்கு ஏற்றார் போல் பெயிண்ட் செய்து, அதன் மீது க்ளிட்டேர் தூவிக்கொள்ள வேண்டும்.
 
4) வேண்டுமானால் ஒவ்வொரு மயில்கண் மீதும் ஒரு கலர் ஸ்டோன் ஒட்டிகொல்ள்ளலாம். பார்க்க மிக அழகாக இருக்கும்.
 
 
 
5) கடைசியாக நம் விருப்பம் போல ஒன்று, மயிலின் பின்பகுதியில் டபுள் டேப் ஒட்டி சுவற்றில் (மரசுவர் or மரக்கதவு) அப்படியே ஓட்டிவிடலாம், இல்லையென்றால் ஒரு கார்டோர்ட் அட்டையில் பெயிண்ட் அடித்து அதில் மயிலை ஒட்டி சுவற்றில் மாட்டி விடலாம். இரண்டுமே பார்பதற்கு அழகாக இருக்கும்.
 
 
இது மிகவும் அழகான ஒரு கரப்ட் ஆகும். இதை பூஜை அறைக்கதவு, வீட்டின் முன் கதவு, அல்லது ஒரு பெயரின் இரண்டு பக்கத்திலும் இரண்டு மயில் செய்து ஓட்டலாம்.
 
என்னுடைய குழந்தையின் பிறந்தநாளுக்கு இப்படித்தான் செய்தேன். எல்லோரும் பாரட்டினார்கள்.
இதை நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள்.
 
                                                         நன்றி!!!


 

Sunday, November 24, 2013

தெர்மோகோல் ரங்கோலி சுவர் அலங்காரம் (thermocol rangoli wall craft!)!

தேவையான பொருட்கள்:


தேவையற்ற உடைந்த தெர்மோகோல் (சிறிது சிறிதாக உடைத்துக்கொள்ளவும்)
 
கார்டோர்ட் அட்டை (எதாவது ஒரு அட்டை)
 
பெயிண்ட் 
 
பசை (glue or gum) 
 
அலங்கரிக்க தேவையான கற்கள் அல்லது மணிகள் 
 
சுவற்றில் மாட்டுவதற்கு புஷ் பின் (push pin or double tape)
 

செய்முறை:

1) முதலில் த்ர்மொகோளை சின்னச்சின்னதாக உடைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அட்டையில் வெள்ளை பெயிண்ட் அடித்து காய விட வேண்டும்.

 
2) எதாவது ஒரு ரங்கோலி டிசைனை மனதிற்கொண்டு, அதற்கு ஏற்றார் போல் பென்சிலால் அவுட்லைன் போட வேண்டும். பிறகு அவுட்லைன் போடப்பட்ட பகுதியில் பசை தடவி அதில் தெர்மோகோல் தூள்களை பரப்ப வேண்டும்.
 
 
3) தெர்மோகோல் கொண்டு அழகாக நிரப்பப்பட்ட ரங்கோலியின் மேல் பிடித்த நிறத்தில் பெயிண்ட் கொடுக்கவும். நடுவில் மற்றும் வேண்டிய இடத்தில கற்கள் கொண்டு அலங்கரிக்கவும்.
 
 
4) பெயிண்ட் மற்றும் பசை  நன்றாக உலர்ந்த பிறகு சுவற்றில் புஷ் பின் அல்லது டபுள் டேப் கொண்டு ஒட்டிவிடவும்.
 
 
இப்பொழுது ஒரு அழகான ரங்கோலி வால் கிராப்ட் தயார். இது தேவையல்லாத பொருளைக்கொண்டு செய்யும் ஒரு அழகான எளிமையான கிராப்ட் ஆகும் .

 
இதை நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள்.
                                                              நன்றி!!!

Saturday, November 23, 2013

முட்டை அட்டைக் கொண்டு செய்த பூக்குவளை (egg carton flower vase)!

தேவையான பொருட்கள்:

 
முட்டை அட்டை (egg carton)
 
கத்தரிகோல் (scissor)
 
பெயிண்ட் (paint)
 
மெல்லிய கம்பி (wire)
 
நீளமான பாட்டில் or திசு ஹோல்டர் (plastic bottle or tissue tube holder)
 
ரெசின் கற்கள் (resin color stones)
 

செய்முறை:

1) முட்டை அட்டைக் குழிகளை தனித்தனியாக கத்தரிக்கவும்.
 
 
2) ஒவ்வொன்றையும் பூ போல வெட்டிக்கொள்ள வேண்டும்.
 
 
3) பூக்களின் நடுவில் சிறு துளையிட்டு கம்பியினை செருகி, நுனியினை மடக்கி விட வேண்டும்.
 
 
4) பூக்களுக்கு தகுந்த நிறத்தில் வண்ணம் தீட்டிக்கொள்ள வேண்டும். 
 பூக்களின் நடுப்பகுதியில் ரெசின் கற்களை ஒட்டவும் (இதற்கு பதிலாக மணிகள் கூட ஓட்டலாம்).
 
 
5) பிறகு ஒரு நீளமான பாட்டில் அல்லது திசு ஹோல்டரை எடுத்து, எடுப்பான வண்ணத்தில் பெயிண்ட் செய்து அதில் கொஞ்சம் மண் நிரப்பி, அதில் கம்பிகளை அழுந்த செருக வேண்டும் (அப்போதுதான் பூக்கள் சாயாமல் இருக்கும்).
 
 
இப்பொழுது ஒரு அழகான முட்டை அட்டை பூகுவளை தயார்.
 
இதனை நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதுங்கள்.
 
                                                    நன்றி!!!

பிளாஸ்டிக் கேன் பூக்கள் சுவர் அட்டை அலங்காரம் (Plastic flowers cardboard wall craft!)

 தேவையான பொருட்கள்:

 
 
பிளாஸ்டிக் கேன் (plastic can like milk jug, oil can, etc)
 
பெயிண்ட் (paint)
 
சிசர் (scissor)
 
பசை துப்பாக்கி (glue gun)
 

 

செய்முறை:

1) முதலில் பால் கேனில் பூ இதழ்கள் வரைந்து அதை கத்தரித்து வைத்துக்கொள்ளவும்.
 
 
2) பிறகு ஒரு கார்ட்போர்டை (cardboard) சதுரமாக வெட்டி அதில் பேக்கிரௌண்ட் கலர் கொடுக்கவும். பெயிண்ட் காய்ந்ததும் வெட்டி வைத்த  இதழ்களை பூப் போல  ஒட்டவும்.
 
 
3) பூக்கள் நிறைய ஒட்டி அதற்குத் தகுந்தார் போல தண்டு, இலைகள் வரைந்துக்கொள்ளவும்.
 
 
4) பெயிண்ட் நன்றாக காய்ந்ததும், டபுள் டேப் கொண்டு சுவற்றில் அழகாக ஒட்டிவிடவும்.
 
 
இது செய்வதற்கு மிக எளிமையான, பார்க்க அழகான சுவர் அலங்காரம்.
 
பூக்களை பிளாஸ்டிக் கானில் இருந்து செய்வதால், தேவையில்லாத பொருளை  அழகாக உபயோகப் படுத்தியதாகவும் இருக்கும், அதே சமயம், பூக்களும் பார்பதற்கு கொஞ்சம் மினுமினுப்பாக அழகாக இருக்கும்.
 
 
இதை உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள், உங்கள் கருத்துகளை எனக்கு எழுதுங்கள்!
 
                                                     நன்றி!!! 
 
 

Thursday, November 21, 2013

பிளாஸ்டிக் கேன் விளக்கு அலங்காரம் (Candlelight decoration with plastic can)

தேவையான பொருட்கள் 

மண் விளக்கு (pot candle)
 
நெயில் பாலிஷ் nail polish)
 
பிளாஸ்டிக் கேன் (like milk jug, oil can, etc)
 
சின்ன உருண்டை மெழுகுவர்த்தி (small round candle)
 
பசை துப்பாக்கி (hot glue gun)
 
பைப் கிளீனர் (pipe cleaner or cure pipes, we can get this in craft shop)
 
க்ளிட்டேர் (glitter)
 
ஜம்கி 
 

செய்முறை 

1) முதலில் மண் விளக்கினை நெயில் பாலிஷ் கொண்டு வண்ணம் தீட்டவும், இந்த கோட்டிங் எண்ணெய் உறிஞ்சுவதை தடுக்கும்.

 
 
2) பால் கேனில் பூ இதழ்கள் போல வரைந்து அதை தனிதனியாக கத்தரித்துக் கொள்ளவும்.
 
 
3) ஒரு சின்ன அட்டை எடுத்து அதை உருண்டையாக கத்தரித்து, நடுவில் விளக்கினை வைக்கும் அளவு ஒரு வட்டம் போட வேண்டும். பிறகு கத்தரித்து வைத்தவற்றை ஒவ்வொன்றாக அந்த வட்டத்தின் மேல் ஓட்ட வேண்டும்.
 
 
4) இப்பொழுது ஒரு அழகான பூ வடிவம் கிடைக்கும். பைப் கிளீனர் ஒன்று எடுத்து அதை வட்டத்தின் மேல் வட்டமாக ஓட்ட வேண்டும் (பைப் கிளீனரை எப்படி வேண்டுமானாலும் மடக்கலாம், இது இல்லாதவர்கள் வேறு அலங்கார பொருள் கொண்டு அலங்கரிக்கலாம்). பிறகு கோல்டன் கலர் பைப் கிளீனரை பூ இதழ்களின் ஓரம் சுற்றி ஒட்டவும்.
 
 
5) பிறகு ஒரு நெயில் பாலிஷ் கொண்டு பூவிற்கு வண்ணம் தீட்டவும்.
 
 
6)  நெயில் பாலிஷ் காய்ந்த பிறகு ஜம்கி மற்றும் க்ளிட்டேர் கொண்டு படத்தில் காட்டுவது போல் (அல்லது உங்கள் விருப்பம் போல்) அலங்கரிக்கவும்.
 
 
7) இப்பொழுது விளக்கினை பூவின் நடுவில் அட்டையின் மேல் ஒட்டவும். வேண்டுமானால் விளக்கின் நடுவில் எண்ணைக்கு பதிலாக சின்ன மெழுகுவர்த்தி வைத்துக்கொள்ளலாம்.
 
 
 
இப்பொழுது அழகான சுலபமான வேட்டிலேயே செய்யக்கூடிய விளக்கு அலங்காரம் தயார்.
 
 
இதை நம்முடைய பூஜை ரூமில் வைக்கலாம். பார்க்க மிகவும் அழகாக இருக்கும் . நீங்களும் இதை செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதுங்கள்.
 
                                                         நன்றி!!!

Wednesday, November 20, 2013

திசு பேப்பர் ஹோல்டர் சுவர் அலங்காரம் (tissue paper holder wall craft)

தேவையான பொருட்கள்:

 
தேவை இல்லாத திசு பேப்பர் ஹோல்டர் (waste tissue holder)

கத்தரிகோல் (scissor)

தேவை இல்லாத கார்ட்போர்ட் அட்டை (cardboard like tv cover, pizza cover)

பசை (glue)

பெயிண்ட் (paint)

க்ளிட்டர் (glitter)

செய்முறை:

1) திசு பேப்பர் ஹோல்டரை படத்தில் காட்டுவது போல் சின்னச்சின்னதாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
 
 
2) பிறகு ஒரு அட்டையை எடுத்து சதுரமாக வெட்டி அதில் வெள்ளை வண்ணம்  தீட்டவும். அதில் வெட்டிய  திசு ஹோல்டர் பகுதிகளை பூ வடிவில் (படத்தில் உள்ளது போல்) ஒட்டவும்.
 
 
3) பிறகு அதில் அழகாக பெயிண்ட் செய்து, glitter தூவவும்.
 
 
4) பெயிண்ட் நன்றாக காய்ந்த பின், அட்டையை சுவற்றில் அழகாக மாட்டவும் அல்லது டபுள் சைடு டேப் (double side tape) கொண்டு சுவற்றில் ஒட்டிவிடவும்.
 
 
இப்பொழுது அழகான சுவர் மாட்டி தயார்.
 
 
இந்த சுவர் அலங்காரம் மிக எளிதாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு செய்யகூடிய ஒரு கைவினைப் பொருளாகும். இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதுங்கள்!
                                                       
                                                              நன்றி !
 
 

எளிதான தண்ணீர் பாட்டில் பூ ஜாடி (water bottle flower vase)!

தேவையான பொருட்கள்

 
காலி தண்ணீர் பாட்டில்கள்
சிறு குச்சிகள்
வண்ணம் (paint)
பசை துப்பாக்கி (glue gun or glue)
ஒரு காலி பிளாஸ்டிக் பாட்டில்
பட்ஸ் (earwax cotton buds)

 

 

 

செய்முறை

1) முதலில் தண்ணீர் பாட்டிலை படத்தில் காட்டுவது போல் இரண்டாக வெட்டவும்.
















2) பாட்டிலின் மேல் பகுதியை பூ வடிவில் வெட்டி, அதன் இதழ்களை மடக்கி விடவும்.


3) பிறகு பிடித்த வண்ணம் தீட்டிக்கொள்ளவும்.


4) மூடியின் நடுவில் சிறு துலையிட்டு ஒரு குச்சியினை செருகி அதனை ஆடாமல் ஒட்டிக்கொள்ளவும். அதன் மேல் பகுதியில் பட்சை இரண்டாக மடித்து ஒட்டவும்.
 
 
 
5) பாட்டிலின் மீதி உள்ள பகுதியை, சற்று பெரிய இலை வடிவில் வெட்டி பச்சை வண்ணம் தீட்டவும். இலைகளை குச்சியில் இடைவெளி விட்டு ஒட்டிக்கொள்ளவும்.
 
 
6) இது போல இன்னும் நான்கைந்து பூக்கள் செய்து வண்ணம் தீட்டி காய விடவும். ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை அழகாக டிசைன் அல்லது வண்ணங்கள் தீட்டி அதற்குள் கொஞ்சம் மணல் அல்லது களிமண் நிரப்பவும். பிறகு அதில் பூக்களை செருகவும்.
 
 
இப்பொழுது அழகான மிக எளிதான பூ ஜாடி தயார். இந்த பூ ஜாடி பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். உங்கள் வீட்டின் அழகை நிச்சியமாக அதிகரிக்கச் செய்யும்.
 
 
இதனை செய்து பாருங்கள், வீட்டினை அழகாக மாற்றுங்கள் வெறும் தேவை இல்லாத பாட்டில்களைக்கொண்டு.
 
மீண்டும் அடுத்த ப்ளாகில் சந்திப்போம்! உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்!
 
                                             நன்றி!
 
Related Posts Plugin for WordPress, Blogger...